44வது இந்தியத் தொழிலாளர் மாநாடு பிப்ரவரி 14,15 ஆகிய தேதிகளில் புது தில்லியில் நடைபெற்றது. இந்தியத் தொழி லாளர் மாநாடு, தொழிலாளர் பிரச்ச னைகள் சம்பந்தமாக விவாதிப்பதற்கான மிக உயர்ந்த முத்தரப்பு அமைப்பாகும். வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் முத் தரப்பு தொழிலாளர் மாநாடு என்று துவங் கப்பட்ட இந்த ஏற்பாடு சுதந்திரத்திற்குப் பின் இந்தியத் தொழிலாளர் மாநாடு என்று அழைக்கப்படுகிறது. மத்திய – மாநில அரசுப் பிரதிநிதிகள், தொழில் உடமை யாளர்கள், மத்திய தொழிற்சங்க பிரதி நிதிகளும், ஆலோசகர்களும் உள்ளடங் கிய இந்த மாநாடு ஒவ்வொரு ஆண்டும் இதற்கென உள்ள தொழிலாளர் நிலைக் குழுவால் நிர்ணயிக் கப்படும் தலைப்புகள் குறித்து விவாதித்து, அரசுக்கு பரிந் துரைகளை சமர்ப்பிக்கிறது. மத்திய தொழிலாளர் அமைச்சர் தலை மையில் நடைபெற்ற இந்த மாநாட்டை இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் துவக்கி வைத்தார். தொழிலாளர் தரப்பி லிருந்து பி.எம்.எஸ்.தலைவர் சஜி நாராய ணனும், மாநில அரசுகளின் பிரதிநிதியாக ஹரியானா தொழிலாளர் அமைச்சரும், முதலாளிகள் சங்க பிரதிநிதி ஒருவரும் துணைத்தலைவர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டனர். சிஐடியுவின் சார்பில் ஏ.கே.பத்ம நாபன், தபன்சென், டாக்டர் ஹேமலதா, ஸ்வதேஷ் தேவ்ராய் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு குறைந்தபட்ச ஊதியம், சமூகப் பாதுகாப்பு திட்டங்கள், வேலை வாய்ப்பு மற்றும் வேலைக்கான திறன் வளர்ப்பு ஆகிய மூன்று தலைப்புகளில் விவாதம் நடத்துவதென நிலைக்குழு முடிவு செய்திருந்தது. பிரதமர் உரை துவக்கவுரை ஆற்றிய பிரதமர்,அவரது வழக்கமான தொழிலாளர் விரோத கருத் துக்களையே முன்வைத்தார். தொழிலாளர் சட்டங்கள்தான் வேலைவாய்ப்புக்கு தடையாக இருக்கிறதோ என்ற கேள் வியை 43 வது மாநாட்டில் எழுப்பிய பிரத மர், இந்த மாநாட்டிலும் அதே கருத்துடன் தான் உரையாற்றினார். அதற்குமேலும் பெண்கள் வேலைவாய்ப்பு குறித்து பெரி தும் கவலைப்படுபவர் போன்று பேசத் துவங்கிய அவர், பெண்கள் குடும்பப் பொறுப்புகளையும் கவனித்துக்கொண்டு, பணியாற்றுவதற்காக பகுதிநேர பணி முறைகள் அமலாக்க வேண்டுமென்றும் இதற்காக சட்டங்களை திருத்த வேண்டு மென்றும் கூறினார். அங்கன்வாடி, சத் துணவு, ஆஷா போன்று லட்சக் கணக்கான பேர் பணியாற்றும் பல சமூகத் திட்டங்களில் பணியாற்றுவோர் தங்களை நிரந்தர ஊழியர்களாக மாற்ற வேண்டு மென்று போராடி வருகையில் பிரதமர், பகுதிநேர பணிமுறையை சட்டத்திருத் தம் செய்து முறைப்படுத்தும் ஆலோச னையை முன்மொழிந்தார். அதே நேரத் தில் மாநாட்டின் முக்கிய விவாதப் பொரு ளான குறைந்தபட்ச ஊதியம் குறித்து ஒரு வார்த்தை கூட பிரதமர் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அமலில் உள்ள மாநில குறைந்தபட்ச ஊதியத்தையாவது மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தில் பணியாற்றுவோருக்கு வழங்க வேண்டுமென்று ஆந்திரா, கர் நாடக மாநில உயர்நீதிமன்றங்கள் தீர்ப் பளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ள மத்திய அரசின் பிரதமர், குறைந்தபட்ச ஊதியம் குறித்துப் பேசு வதற்கு தயாராகாதது யாருக்கும் ஆச் சரியம் அளிக்கவில்லைதான் ! கண்டனக்குரல் மாநாடு கூடுகிறபோதெல்லாம் அரை மணிநேரம் அரங்கத்திற்கு வந்து துவக்க உரையாற்றி செல்வதைத் தவிர, தொழி லாளர் பிரதிநிதிகளை சந்திக்கவோ, பேசவோ பிரதமர் நேரம் ஒதுக்குவ தில்லை. வலியுறுத்தினாலும் கவனிப்ப தில்லை. இதையொட்டிய மத்திய தொழிற் சங்கங்களின் அழுத்தமான கண்ட னத்தை மாநாட்டின் துணைத்தலைவர் சஜி நாராயணன், பிரதமரின் முன்னி லையிலேயே எடுத்துரைத்தார். தொழி லாளர் பிரச்சனைகளில் அரசின் அணுகு முறையை வன்மையாகக் கண்டித் தார்.பிப்ரவரி 28 அன்று மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்து நாடு தழுவிய பொதுவேலைநிறுத்தம் நடப்ப தையும் பிரதமரிடம் சுட்டிக்காட்டினார். துவக்கவுரையாற்றி பிரதமர் சென்றுவிட்ட பிறகு நடைபெற்ற பொது விவாதத்தின்போது உரையாற்றிய மத்திய தொழிற்சங்க தலைவர்கள் அனைவரும் அரசின் தொழிலாளர் கொள்கைகள் குறித்த தங்களது விமர்சனங்களை முன் வைத்தனர். சிஐடியு பொதுச்செயலாளர் தபன்சென் அரசினுடைய அணுகுமுறை களை மிகக் கடுமையாக விமர்சித்தார். பிராவிடன்ட் பண்ட் வட்டி விகிதம், சமூகப் பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கீடு, ஊதியக் கொள்கையே இல்லாத அரசின் நிலை போன்ற பல்வேறு விஷயங்களை சுட்டிக் காட்டிய அவர், பிப்ரவரி 28 அன்று அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்த இருக்கின்ற பொது வேலைநிறுத்தம் அரசின் அணுகு முறைக்கு பலத்த கண்டனமாக நாடெங் கிலும் எழ இருக்கிறது என்று கூறினார். குழு விவாதங்கள் தொடர்ந்து பிரதிநிதிகளும், ஆலோச கர்களும் மூன்று குழுக்களாகப் பிரிந்து மாநாட்டு தலைப்புகளின் மீது விவாதம் நடத்தினர். குறைந்தபட்ச ஊதியம் குறித்த விவாதத்தில் சிஐடியுவின் சார்பில் உரை யாற்றிய ஏ.கே.பத்மநாபன், விடுதலை அடைந்து 65 ஆண்டுகள் ஆகியும் ஒரு ஊதியக் கொள்கையை உருவாக்க அரசு மறுத்து வருவதை கடுமையாக விமர் சித்தார். குறைந்தபட்ச ஊதியச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும், ஊதிய நிர்ணய முறை குறித்து அந்த சட்டம் எவ்வகை வழிகாட்டுதலும் வழங்க வில்லை. 1957ல் 15வது தொழிலாளர் மாநாட்டில் பரிந்துரைக்கப்பட்ட ஊதிய நிர்ணய முறையும் ஏட்டுச் சுரைக்காயா கவே உள்ளது.இந்த பரிந்துரையும் அத னுடன் ரேப்டகாஸ் நிறுவனம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் இணைத்து விலைவாசிப்புள்ளியுடன் இணைத்த பஞ்சப்படியோடு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டுமென்றும், இந்த ஊதியம் நாடு தழுவிய முறையில் அனைத்து தொழில்களுக்கும் குறைந்த பட்ச ஊதியமாக இருக்க வேண்டு மென்றும் சிஐடியு சார்பில் வலியுறுத்தப் பட்டது. இதுவே அனைத்து தொழிற் சங்கங்களின் கருத்தாகவும் அமைந்தது. உடனடியாக குறைந்தபட்ச ஊதியம் ரூ.10,000 என்பதை நிர்ணயித்து அம லாக்க வேண்டுமென்றும் அனைத்து சங் கங்களும் வலியுறுத்தின. சமூகப் பாதுகாப்பு குறித்த குழு விவாதத்தில் சிஐடியுவின் கருத்துக்களை அகில இந்திய செயலாளர் டாக்டர் ஹேமலதா முன்வைத்தார். பிராவிடன்ட் பண்ட் இ.எஸ்.ஐ., முறைசாரா ஊழியர் களுக்கான சமூகப்பாதுகாப்பு போன்ற திட்டங்களில் செய்யப்பட வேண்டிய மாறு தல்கள் பற்றிய கருத்துக்கள் விரிவாக முன்வைக்கப்பட்டன. பிராவிடன்ட் பண்ட், ஓய்வூதியம் மாதம் ஆயிரத்திற்கும் குறையாமல் வழங்கப்பட வேண்டுமென் பது உட்பட பல கோரிக்கைகளையும் அவர் வலியுறுத்தினார். பிரசவகால பயன் சட்டத்தை திருத்தி, பிரசவகால விடுப்பு 24 வாரங்கள் என்று உயர்த்தப்பட வேண் டுமென்றும் வலியுறுத்தினார். வேலைவாய்ப்பு மற்றும் வேலைத் திறன் குறித்த விவாதத்தில் சிஐடியுவின் பல்வேறு ஆலோசனைகளை செயலாளர் தேவ்ராய் முன்மொழிந்தார். திறன் வளர்ச் சித் திட்டங்கள் என்ற பெயரால் அரசு பெருமளவு நிதி ஒதுக்கீடு அறிவித்திருக் கிறது. இதைப் பயன்படுத்தி அரசு – தனி யார் கூட்டு முயற்சியாக திறன் வளர்ப்புத் திட்டங்களை மாற்றும் அரசின் முயற் சியை அவர் விமர்சித்தார். இன்றைய காலத் தேவைக்கு ஏற்ப தொழிற்பயிற்சி நிலையங்களை மேம்படுத்துவதற்கும் அவற்றை அரசின் பொறுப்பில் ஏற்கனவே உள்ள அமைப்புகளைக் கொண்டே இயக்க வேண்டுமென்றும் வலியுறுத் தினார். இந்த மூன்று குழு விவாதங்களிலும் உருவான பிரதான கருத்துக்களை அறிக் கைகளாக உருவாக்கி மீண்டும் பொது மாநாட்டில் முன்வைக்கப்பட்டு, அரசிற்கு பரிந்துரையாக அனுப்பப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: