நாகப்பட்டினம், பிப்.21 வெண்மணி தியாகிகள் ஜோதி பயணம் நாகை நோக்கி புறப்பட்டது, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 20 வது மாநில மாநாடு புதனன்று நாகப்பட்டினத்தில் துவங்கு கிறது. மாநாட்டில் வெண் மணித் தியாகிகள் நினை வாக ஜோதி ஏற்றப்படு கிறது. தியாகிகளின் நினைவு ஜோதி வெண்மணி வீர மண்ணிலிருந்து செவ்வாயன்று தோழர்களின் உற்சாக முழக்கங்களுக்கிடையே கட்சியின் கீழ்வேளுர் ஒன்றி யச் செயலாளர் காத்தமுத்து ஜோதியை எடுத்துக் கொடுக்க மூத்த தோழர்- முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.தம்புசாமி பெற்றுக்கொண்டார். ஜோதி பயணம் தேவூர், வடக்காளத்துர், ஆவராணி புதுச்சேரி. பாப்பாகோவில் வழியாக மாலை நாகப்பட் டினத்தை வந்தடைந்தது. வழிநெடுக கிராமங்கள் தோறும் பயணக்குழு வினருக்கு சிறப்பான வர வேற்பு அளிக்கப்பட்டது. ஜோதியை ஏ.சந்திரசேகரன், சுரேஷ்குமார், பா.பாவேந் தன் ஆகியோர் எடுத்து வந்த னர். நிகழ்ச்சியில் கீழ்வேளூர் முன்னாள் ஊராட்சி ஒன்றி யப் பெருந்தலைவர் எஸ். செல்லையன். கே.செல்ல முத்து, பி.குமார், ராஜேந் திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பயண நிகழ்ச்சி துவக்க விழாவிற்கு முன்னாள் மாவட்ட ஊராட்சித்தலைவர் ஜெய ராமன் தலைமை வகித்தார்.

Leave A Reply

%d bloggers like this: