தஞ்சை, பிப்.21- தடையற்ற மின்சாரம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக தஞ்சாவூர் சாந்தி கமலா திரையரங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாயன்று (பிப்.21) நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டத் தலைவர் கே.பி.சுப்பு (எ) சுப்பிர மணியன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் பி.பக்கிரிசாமி, பொருளாளர் புதுகை சேகர், துணைத் தலைவர் பால்ராஜ், இணைச் செயலாளர்கள் டி. தாமரைச் செல்வன், ஏ.டி.எஸ். செல்வக்குமார், ரெங்க சாமி மற்றும் பனசை. ரெங்கன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், தடையில்லாமல் மின்சாரம் வழங்கவேண்டும். பன்னாட்டு கம்பெனிகளுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் 24 மணி நேரம் மின்சாரம் வழங்குவதை நிறுத்த வேண்டும். தூத்துக்குடி, மேட்டூர், எண்ணூர், நெய்வேலி மற்றும் வடசென்னை அனல், புனல் மின்நிலையங்கள் பழு தாகி ஓராண்டிற்கு மேலாகியும் மத்திய அரசால் முறை யான பராமரிப்பு செய்யப்படவில்லை. உடன் பரா மரிப்புச் செய்யவேண்டும். மத்திய அரசிடம் கூடுத லாக மின்சாரத்தை மாநில அரசு கேட்டுப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.