புதுதில்லி: ஆண்டுக்கு, ரூ.5 லட்சம் வருமானம் தாண்டாத சம்பள ஊழியர்கள் இந்த ஆண்டு முதல் வருமானவரித் தாக்கல் செய்ய வேண்டியது இல்லை என நிதித் துறை அமைச்சக அறிவிக்கை தெரிவித் துள்ளது. இந்தியாவில் 85 லட்சம் சம்பள ஊழியர்கள் உள்ளனர். இந்த அறிவிக் கைக்கு முன்னர், சம்பளம் பெறும் அனைத்து ஊழியர்களும், வருமானவரிச் சட்டம் 1961ன் படி வருமான வரித்தாக்கல் செய்ய வேண்டிய நிலை இருந்தது. தற்போது ரூ.1.80 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 10 சதவீதம் வருமான வரியாக பெறப்பட்டது. ரூ.5-8 லட்சத்திற்கு 20 சதவீதமும் ரூ.8 லட்சத்திற்கு மேல் 30 சத வீதமும் வரி பிடிக்கப்பட்டது. நேரடி வரி வரையறை (டிடிசி) தற்போது நாடாளு மன்றக் குழுவால் ஆய்வு செய்யப்படுகிறது. இந்தக்குழு வரி விலக்கு வரையறையை ரூ.1.80 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என பரிந்துரைத்திருந் தது.

Leave A Reply

%d bloggers like this: