உலகின் மிகப்பெரிய போக்குவரத்துத் துறை களில் ஒன்று என்ற பெருமை இந்திய ரயில்வே க்கு உண்டு. நாடு முழுவதும் இன்று மக்கள் பய ணம் மேற்கொள்ளவும், தொழில் நடத்தவும், வாழ் வாதாரங்களை அமைத்துக் கொள்ளவும், உறவு களை வளர்த்துக் கொள்ளவும் ரயில்வே தடங் கள் ஒரு மையமான பங்களிப்பை செய்து கொண் டிருக்கின்றன என்றால் அது மிகையல்ல. ஆனால் அண்மைக்காலமாக ரயில்வேயின் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டதோடு எந்த வேகமும் எடுக்காமல் அப்படியப்படியே கிடப் பில் போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் கூட பல புதிய தடங்கள் தொடங்கப்பட்டு, இன்னும் முடி வடையாமல் இழுத்துக் கொண்டிருக்கின்றன. அகலப்பாதை திட்டங்கள் முழுமையடையாமல் நிற்கின்றன. சில முக்கிய ரயில் தடங்களை இரட் டிப்பாக்கும் திட்டங்கள் திணறிக் கொண்டிருக் கின்றன. நாடு முழுவதுமே இதுதான் நிலைமை. ஒருபக்கம் பயணிகள் போக்குவரத்து அதி கரித்துக் கொண்டேயிருக்கிறது. சரக்குகள் போக் குவரத்தும் கூடுதலாகிக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டும் ஒரு வலுவான, விரிவான ரயில் வே சேவை அவசியம் என்பதையே வலியுறுத்து கின்றன. ஆனால் ரயில்வே துறையை கையில் வைத்துள்ள மத்திய அரசோ, நெருக்கடிகள் ஏற் படுகிறபோதெல்லாம் ஒரு குழுவை அமைப்பது, அந்தக்குழு அளிக்கிற அறிக்கையை வாங்கி வைத்துக் கொள்வது என்பதையே வழக்கமாக் கிக் கொண்டிருக்கிறது. ரயில் தடங்களை கண் காணிக்கிற தொழிலாளர்கள் முதல் பல்வேறு பணிகளுக்குமான ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டிய தேவையும் இரு க்கிறது. ஆனால் நடப்பது என்னவென்றால், ஏற் கெனவே இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, லட்சக்கணக்கான பணி யிடங் கள் நிரப்பப்படாமலேயே இருக்கின்றன என்பது தான். இத்தனைக்கும் ஆண்டுதோறும் லாபகர மாகவே இந்தத் துறை இயங்கி வருகிறது. ஆயினும் ரயில்வே திட்டங்கள் வேகம் பிடிக் காததற்கும், போதிய ஊழியர்கள் நியமிக்கப் படாததற்கும் சொல்லப்படுகிற காரணம், ரயில்வே நிர்வாகத்திடம் நிதி இல்லை என்பதே யாகும். கடைசியாக மத்திய அரசு நியமித்த ககோட்கர் குழு தனது அறிக்கையில், கிட்டத் தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டப் படவேண்டும்என்றுகூறியுள்ளது.அந்தநிதியைத் திரட்டுவதற்கு, பயணிகள் மீது வரி விதிப்பது, மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் ரயில்வே நிர்வாகம் தருகிற லாபப் பங்கீட்டை நிறுத்துவது போன்ற ஆலோசனைகளை கூறியிருக்கிறது. சுற்றி வளைத்து இது மக்கள் மீதுதான் சுமை களை ஏற்றும். சாலைப் போக்குவரத்தை பொறுத்தவரையில் மத்திய – மாநில அரசுகள்தான் சாலைகளை அமைக்கின்றன. அந்தசாலைகளைஅரசுப்போக் குவரத்து நிறுவனங்களும், தனியார் நிறுவனங் களும் பயன்படுத்திக் கொள்கின்றன. சாலை அமைக்கும் வேலையை போக்குவரத்து நிறு வனங்கள் செய்வதில்லை. அதேபோன்ற ஒரு கொள்கையை ஏன் மத்திய அரசு உருவாக்கக் கூடாது. ரயில்வே தடங்களை அமைப்பது, பரா மரிப்பது போன்ற பொறுப்புகளை மத்திய அரசே ஏற்கலாமே? அல்லது அதற்கான நிதியை மத் திய அரசே ரயில்வேயிடம் ஒப்படைக்கலாமே? இத்தகைய மாற்று வழிகளை ஆலோசிக்காமல், வல்லுநர் குழுக்களின் அறிக்கைகளை காரண மாக்கி மக்கள் மீது சுமைகளை ஏற்ற முயன்றால் அது கடும் எதிர்ப்புக்கு உள்ளாகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.