நாகர்கோவில், பிப்.21- தமிழக அரசின் அறி விக்கப்படாத மின்வெட் டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பல்வேறு விதமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குமரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னின்று போராடி வருகிறது. இராஜாக்கமங் கலம் ஒன்றியக்குழு சார் பில் ஈத்தாமொழி சந்திப் பில் மெழுகுவர்த்தி ஏந்தி தர்ணா போராட்டம் நடை பெற்றது. தர்ணாவுக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் என். எஸ். கண்ணன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சிவா, பெருமாள், ரகுபதி, ஷாகுல் ஹமீது ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாவட்டக்குழு உறுப் பினர் சிவகோபன் துவக்கி வைத்துப் பேசினார். கோரிக் கைகளை விளக்கி, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் ராஜகுமார், யூனியன் கவுன் சிலர் அந்தோணி ஆகி யோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. செல்லப்பன் முடித்து வைத்துப் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.