நாமக்கல், பிப். 21- நாமக்கல்லில் திங்க ளன்று (பிப். 20) தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பண்ணை யாளர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முட்டை விலையில் 9 காசுகள் உயர்த் தப்பட்டு, முட்டை பண்ணை கொள்முதல் விலை 280 காசாக நிர்ணயம் செய்யப் பட்டது. முட்டை ஏற்றுமதி அதிகரிப்பு, வட மாநிலங்களில் முட்டை விற்பனை அதிகரிப்பு போன்ற காரணங்களால் முட்டை விலை உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ முட்டை கோழி விலை ரூ. 33 ஆகவும், ஒரு கிலோ கறிகோழி விலை ரூ. 56 ஆகவும் நிர்ணயம் செய் யப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: