இஸ்லாமாபாத், பிப். 21 இந்திய மக்களவை சபா நாயகர் மீராகுமார், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குழுவுடன் அதிகாரப்பூர்வ பயணமாக பாகிஸ்தான் வந்துள்ளார். பாகிஸ்தான் மக்களவை சபாநாயகர் பெஹ்மிடா மிர்சாவின் அழைப்பை ஏற்று இந் தியக்குழு இஸ்லாமாபாத் வந்துள்ளது. பாகிஸ்தானுக்கு வந் துள்ள மீரா குமார், பாகிஸ் தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ரஸா கிலானி, தேசிய சட் டமன்ற சபாநாயகர் மிர்சா, செனட் தலைவர் பரூக் நாயக் ஆகியோரைச் சந்திக் கவுள்ளார். இந்தியக்குழுவில் முன் னாள் அமைச்சர்கள் பி.பி. வைஷ்யா, ஷாநவாஸ்கான் ஆகியோர் உள்ளிட்ட ஆறு நாடாளுமன்ற உறுப் பினர்கள் இடம்பெற்றுள் ளனர். மகளிர் குழுவொன் றையும், பாகிஸ்தான் – இந் தியா நாடாளுமன்ற நட் புக்குழுவையும் இக்குழு சந்திக்கும். புத்த பாரம்பரிய தலமான தட்ச சீலாவையும் இக்குழு சுற்றிப் பார்க்கும்

Leave A Reply

%d bloggers like this: