திருவாரூர், பிப். 21- திருவாரூரில் நடை பெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மீனவர் குடும்பத்தை சேர்ந்த 10,12 ஆம் வகுப்பில் அதிக மதிப் பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளை மாவட்ட ஆட் சியர் சி.நடராசன் வழங்கிப் பாராட்டினார். இந்த கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து 376 மனுக் கள் வரப்பெற்றன. இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களை கேட்டுக்கொண்டார். மீனவ குடும்பங்களைச் சார்ந்த மாணவ, மாணவி களுக்கு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதல் இரண்டு இடங்களைப் பெற்றவர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாயும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடத்தை பெற்றவர் களுக்கு ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடத்தை பெற் றவர்களுக்கு 500 ரூபாயும், 3ஆம் இடத்தைப் பெற்ற வர்களுக்கு 300 ரூபாயும் ரொக்கப்பரிசாக 8 மாணவ – மாணவிகளுக்கு வழங்கப் பட்டது. வெங்காயத்தாமரை திருவாரூர் மாவட்டத் தில் வெள்ளப் பாதிப்பு களை அதிகம் ஏற்படுத்தும் நீர்நிலைகளில் தேங்கியுள்ள வெங்காயத்தாமரை செடி களைப் பயன்படுத்தி மண் புழு உரம் தயாரிப்பது குறித்து உரிய செயல் முறை களையும் மிகவும் பயன் தரும் உரமாக இதனை உருவாக்க தக்க ஆலோ சனைகளையும் இக்கூட்டத் தில் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். பொதுமக்கள் அளிக் கும் மனுக்கள் மீது காலதாம தம் செய்யாமல் உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையற்ற முறையில் காலதாமதம் செய்யும் அலுவலர்கள் மீது சட்டப்படி கடும் நட வடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். கூட் டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.ஜீவகனி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ந.சுப்பிரமணி யன், சமூகப்பாதுகாப்பு நல தனித்துணை ஆட்சியர் ப.லலிதாவதி,கோட்டாட்சியர் ஸ்ரீராமன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர் களும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: