திருவாரூர், பிப். 21- தமிழ்நாட்டில் நிலவி வரும் கடும் மின்வெட் டைக் கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரக்குழுவின் சார்பில் செவ்வாய்க்கிழமை அன்று திருவாரூரில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. துர்காலயா சாலையில் உள்ள மின்வாரிய அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் எஸ்.ராமசாமி தலைமை வகித்தார். நகரக் குழு உறுப்பினர்கள் எஸ். கிருஷ்ணன், குரு.சந்திரசேக ரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கவிஞர் பகவன்ராஜ் மின்வெட்டு குறித்து கவிதை வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் கே.ரெங்கசாமி ஆர்ப் பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். மாவட்டக்குழு உறுப் பினர் எஸ்.நவமணி, கட்சி யின் ஒன்றிய செயலாளர் பி.மாதவன், முறைசாராத் தொழிலாளர் சங்க (சிஐ டியு) மாவட்டச் செயாளர் எம்.அசோகன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். தமிழக அரசு உடனடி யாக மின்வெட்டைச் சரி செய்ய வேண்டும். பன் னாட்டுக் கம்பெனிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கி உள்நாட்டு தொழில் களை அழிக்கும் செயலை கைவிட வேண்டும். சிறு – குறு தொழில்களை பாது காக்க தடையில்லா மின் சாரம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.