திருப்பூர், பிப். 21- திருப்பூர் வடக்கு மாந கரம் கவுண்டநாயக்கன் பாளையம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிறன்று சிறப்புப் பேரவைக் கூட் டம் நடைபெற்றது. கவுண் டநாயக்கன்பாளையம் வடக்குக் கிளைச் செயலா ளர் அர்ஜூனன் தலைமை யில் நடைபெற்ற இக் கூட்டத்தில் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செய லாளர் கே.காமராஜ் கலந்து கொண்டு தமிழக அரசியல் நிலைமை குறித்து விளக் கிக் கூறினார். மாவட்டக் குழு உறுப்பினர் பி.முருகே சன், கவுண்டநாயக்கன்பா ளையம் தெற்குக் கிளைச் செயலாளர் வேலுச்சாமி, பிஎன்பாளையம் கிளைச் செயலாளர் மனோகரன், கருமாரம்பாளையம் கிளைச் செயலாளர் மாணிக்க சுந்தரம் உள்பட ஏராளமானோர் இக்கூட் டத்தில் கலந்து கொண் டனர்.

Leave A Reply

%d bloggers like this: