ஹைதர் அலியால் படைக்குத் தேவையான குதிரைகளை வளர்க்க உரு வாக்கப் பட்டது ஓசூர் அருகில் உள்ள கால்நடைப் பண்ணை. ஆங்கிலேயர் காலத்திலும் குதிரைப் பண்ணையாகவே நீடித் தது. விடுத லைக்குப் பிறகு மாவட்ட கால்நடைப் பண்ணையாக மாற்றப் பட்டது. ஓசூரில் உள்ள மாவட்ட கால்நடைப் பண்ணை ஆசியக் கண்டத்தில் பெரி யது என பெயர் பெற்றி ருந்தது. ஆயிரக்கணக்கான கால்நடைகளும் அவற்றை பராமரிக்க 700க்கும் மேற் பட்ட ஊழியர்களும் இருந்த நிலை மாறியுள் ளது. தற்போது 600க் கும் குறைவான கால்நடை களும் 100க்கும் குறைவான ஊழியர்களும் உள்ளதாக சிஐ டியு மாவட்ட நிர்வாகி பி.ஜி. மூர்த்தி தெரி வித்தார். மத்திய அரசின் சுற் றுச்சூழல் பாதுகாப்புத் துறையின் அனுமதி கிடைக் காததால் சர்வதேச தரத் தில் கோழி ஆராய்ச்சி மையம் இப்பண்ணையில் அமைக்கும் பணி துவக்கப் படவில்லை. இதற்காக 80 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட் டுள்ளதாக பண் ணையின் துணை இயக்குநர் எஸ். செல்வராஜ் தெரிவித்தார். ஆயிரத்து 641 ஏக்கர் பரப்பளவுள்ள மிகப் பெரிய மாவட்ட கால் நடைப் பண்ணையை மேம்படுத்த மத்திய மாநில அரசுகள் முன்வர வேண் டும் என்கிற கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வருவ தாக விவசாயிகள் தெரிவித் துள்ளனர். நேரடியாகவும் மறை முகமாகவும் ஆயிரக் கணக்கானோருக்கு மா வட்ட கால்நடைப் பண்ணை வேலை வாய்ப்பை அளித்து வந்துள்ளது. அண் மைக் காலமாக ஊழியர் எண் ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது என்கிறார் மூர்த்தி. போதுமான ஊழி யர்களை நியமனம் செய்து மாவட்ட கால்நடைப் பண்ணையை அழிவிலி ருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். விவசாயிக ளுக்கு பல்வேறு வகையில் இப்பண்ணை உதவி வந்த தாகவும், இங்கு செயல்பட்டு வந்த வேளாண் பல்கலைக் கழக மாணவர் விடுதி தற் போது காவல் துறையினர் பயன்படுத்த அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் தமிழ் நாடு விவசாயிகள் சங்க ஓசூர் ஒன்றியச் செயலா ளர் டி. கோதண்டராமன் தெரிவித்தார். கால்நடைப் பண்ணையை முழுமையாக பயன்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். சி. முருகேசன்

Leave a Reply

You must be logged in to post a comment.