சென்னை, பிப். 21- மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் கீழ் பணிபுரியும் மருத்துவ அலுவலர்கள் / மருத்துவம் சாரா பணி யாளர்கள் / அமைச்சுப் பணியாளர்களை கலந்தாய்வு மூலம் இடமாற்றம் செய்வதற்கான விரிவான வழிகாட்டு நெறி முறைகள் 20.11.2007-ம் நாளிட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் அரசாணை (2டி) எண்.131ல் வழங் கப்பட்டுள்ளது. இவ்வழிகாட்டு நெறிமுறைகளின்படி இடமாற்றம் செய்வதற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. தற் பொழுது, இவ்வாண்டுக்கான பணி இடமாற்றம் செய்வதற் கான கலந்தாய்வுக் கூட்டம் எதிர்வரும் மார்ச் மற்றும் மே, 2012 மாதங்களில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் உள்ள அனைத்து இயக்ககங்களின் துறைத் தலைவர்களுக் கும் இதுதொடர்பாக ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. பணியிடமாற்ற கலந்தாய்வு மருத்துவக் கல்வி இயக்ககத் தில், மார்ச்-2012, முதல் வாரமும், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்தில், மே இரண்டாவது வாரமும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக் ககத்தில் மே மூன்றாவது வாரமும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் கீழ் வரும் இதர இயக்ககங்களுக்கு மே நான்காவது வாரமும் நடைபெறவுள்ளன. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் கீழ் வரும் அனைத்துத் துறை தலைவர்களும், இடமாற்ற கலந் தாய்வுக்கு முன் எவ்வித இடமாற்றமும் அதற்கான பணி நியமன ஆணைகளும் வழங்கக்கூடாது என்று ஆணை யிடப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.