நாகர்கோவில், பிப்.21- புகார் கொடுக்க வந்தவர் களை இழிவாக பேசிய போலீ சாரை கண்டித்து பூதப்பாண்டி யில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பூதப்பாண்டி அழகம்மன் கோயில் தெருவில் அனுமதி யின்றி கட்டப்பட்ட ஜெபக் கூடத்தை அகற்றக்கோரி துவரங்காடு சந்திப்பில் சில நாட்களுக்கு முன் பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். வரு வாய்துறை, காவல்துறை அதி காரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஜெபக்கூடத்தை அகற்ற நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் போராட் டம் கைவிடப்பட்டது. ஆனால் கடந்த சனிக்கிழமை குறிப் பிட்ட ஜெபக்கூடத்தில் ஜெபம் நடந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அப் பகுதி பெண்கள் உள்பட பொது மக்கள் பூதப்பாண்டி காவல் நிலையத்திற்கு புகார் அளிக் கச் சென்றனர். அப்போது எஸ்ஐ மற்றும் போலீசார் பெண்களை யும் பொதுமக்களையும் தகாத வார்த்தைகளால் பேசி இழிவு படுத்தியுள்ளனர். இதனால் எஸ்ஐ மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு மக்கள் பூதப்பாண்டி சந்திப் பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதிமுக பேரூர் செயலாளர் பாண்டியன் தலைமை வகித் தார். மார்க்சிஸ்ட் கட்சியின் வட் டாரச் செயலாளர் மணி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் உஷாபாசி, சந்திரமோகன், ஆர்ப்பாட்டக்குழுத் தலைவர் பாபு, பேரா சிரியர் மெய்யன், திமுக கவுன் சிலர் செந்தில், பேரூராட்சி மதிமுக செயலாளர் ஆறுமுகம் உள்பட சுமார் 500க் கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: