கோவை, பிப். 21- நாடு தழுவிய அளவில் பிப்ரவரி – 28 அன்று நடை பெற உள்ள அகில இந்திய வேலைநிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்க உள்ளதாக அனைத்து அரசு போக்குவரத்து ஊழியர் சங்கங்களும் முடிவு செய் துள்ளன. கோவை அரசு போக் குவரத்துக்கழக சங்க பணி மனை முன்பு செவ்வா யன்று அனைத்து தொழிற் சங்கங்களின் சார்பில் வேலைநிறுத்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது. சிஐடியு சார்பில் அப்துல் ரஷீத் தலைமை வகித்தார். விலைவாசி உயர்வை எதிர்த்தும், தொழிலாளர்க ளின் வேலைப்பாதுகாப்பு, தொழிலாளர் நலச்சட்டங் களை முழுமையாக அம லாக்குதல், காண்ட்ராக்ட் முறை ஒழிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி பிப்ரவரி 28 வேலை நிறுத்தத்திற்கு அனைத்து மத்திய தொழிற்சங்கங்க ளும் அழைப்பு விடுத்துள் ளன. அன்றைய தினம் அரசு போக்குவரத்து ஊழி யர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்குமாறு அனைத்து சங்க நிர்வாகிகளும் கேட் டுக்கொண்டனர். கூட்டத்தில் சிஐடியு சார்பில் ப.காளியப்பன், கே.நாகராஜ், எம்.கிருஷ்ண ராஜ், ஏஐடியுசி சார்பில் எம்.சண்முகம், எல்.பி.எப் சார்பில் கே.செல்லமுத்து, எச்எம்எஸ் சார்பில் ஆர். ராஜா, பிஎம்எஸ் சார்பில் ராஜகோபால், பணியாளர் சங்கத்தின் சார்பில் இளங் கோ, தேமுதிக சங்கம் சார் பில் ரவி, ஐஎன்டியுசி தௌ லத்கான், மதியழகன் உள் ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். வேலைநிறுத்த விளக் கக்கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.