கோவை, பிப். 21- மத்திய தொழிற்சங்கங் களின் அறைகூவலின்படி நாடுமுழுவதும் பிப்ரவரி 28 அன்று நடைபெற உள்ள வேலைநிறுத்தத்தில் கோவை மாவட்டம் முழுவதும் உள்ள இன்ஜினியரிங் தொழி லாளர்கள் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். கோவை ஜில்லா ஜென ரல் இன்ஜினியரிங் அண்டு மெக்கானிக்கல் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) தலைவர் யு.கே.வெள்ளிங்கிரி, செய லாளர் வி.பெருமாள் ஆகி யோர் விடுத்துள்ள செய் திக்குறிப்பில் தெரிவித் துள்ளதாவது, ஏற்கனவே மூலப்பொ ருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டிருந்த இன் ஜினியரிங் தொழில், தற் போது மத்திய அரசின் தவ றான பொருளாதாரக் கொள்கைகளாலும், மின் வெட்டாலும் முற்றிலும் முடங்கியுள்ளது. மறுபு றம் சங்கம் சேரும் உரிமை, கூட்டு பேர உரிமை உள் ளிட்ட தொழிலாளர் சட்ட உரிமைகள் அனைத்தும் பெரும்பாலான நிறுவனங் களில் அமலாவதில்லை. அதேபோல், கோவையின் தொழில்வளர்ச்சியைக் கருத்திக் கொண்டு அனல் மின்நிலையம் அமைத்திட வேண்டும் என்ற கோரிக் கையும் நீண்டகாலமாக அரசால் கண்டு கொள்ளப் படவில்லை. எனவே, அகில இந்திய அளவில் நடை பெற உள்ள பிப்ரவரி 28 வேலைநிறுத்தப் போராட் டத்தில் சங்கத்தின் ஆயிரக் கணக்கான தொழிலாளர் கள் பங்கேற்க முடிவு செய் யப்பட்டுள்ளது. அதேபோல் இயந்திர உற்பத்தி நிறுவனங்கள், பவுண்டரி, பம்ப் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட இத்துறைக ளில் பணியாற்றும் பல்லா யிரக்கணக்கான ஊழியர் கள் பங்கேற்கவும், 70 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட கோவையின் சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள், அவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களும் முழு மையாக பங்கேற்க வேண் டும். போராட்டத்தை விளக்கி சங்கத்தின் சார்பில் விரிவான பிரச்சார ஏற் பாடுகளிலும் ஊழியர்கள் ஈடுபடுவர். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.