கோவை, பிப். 21- பிப்ரவரி 28-ந்தேதி நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தத் தில் தமிழ்நாடு அரசு தொழிற் பயிற்சி அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை ஊழியர் சங் கத்தினர் முழுமையாக பங் கேற்க உள்ளனர். இது குறித்து, வேலை வாய்ப்பு பயிற்சித்துறை யின் தமிழ்நாடு அரசு தொழிற் பயிற்சி அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை ஊழியர் சங் கத்தின் மாநிலத் தலைவர் இரா. ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித் துள்ளதாவது: புதிய பென்சன் திட் டத்தை கைவிட வேண் டும். மத்திய மாநில அரசுத் துறைகளில் காலியாக உள்ள பல லட்சக்கணக் கான பணியிடங்களை நிரப்பவேண்டும். விண்னை முட்டும் விலைவாசிக்கு ஏற்ப குறைந்த பட்ச ஊதி யம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். தொகுப்பூதி யம் மற்றும் ஒப்பந்த முறை யிலான நியமனங்களை கைவிட வேண்டும் என் பது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி வரு கிற 28-ந்தேதி நடைபெற உள்ள ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்தத் தில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஐடிஐ-கள் மற்றும் பயிற்சிப் பிரிவு அலுவலகங்களில் பணி யாற்றும் அனைவரும் முழுமையாக பங்கேற்க உள்ளோம் என தெரிவித் துள்ளார். மேலும். உழைக் கும் மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தில் நாங்க ளும் இணைவதை பெரு மையாக கருதுகிறோம் எனவும் தெரிவித்துள்ளார். உடுமலை நாடு தழுவிய அளவில் நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தப்போராட் டத்திற்கு தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழுக்கூட் டம் வெள்ளியன்று (பிப்.17) உடுமலையில் மாநில தலைவர் து.சிங்கராயன் தலைமையில் நடைபெற் றது. முன்னதாக, அகில இந்திய மாநில அரசு ஊழி யர் சம்மேளனம், தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர் சங்கங்களின் கொடிகள் எழுச்சியுடன் ஏற்றிவைக் கப்பட்டன. இக்கூட்டத்தில் சாலைப் பணியாளர்களின் பணிநீக்க காலத்தை பணிகாலமாக அறிவிக்க வேண்டும். சாலைப் பராமரிப்பு பணி யினை தனியாரிடம் ஒப்ப டைக்கும் முடிவை கை விட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண் டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி பிப்.28ந்தேதி நடை பெற உள்ள பொது வேலை நிறுத்த போராட் டத்தில் திரளாக பங்கேற் பது என முடிவு செய்யப் பட்டது. மேலும், சேலத்தில் வருகின்ற ஏப்ரல் 21 மற்றும் 22- ந் தேதிகளில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங் கத்தின் 4-வது மாநில மா நாட்டை சிறப்புற நடத்து வது எனவும் முடிவு செய் யப்பட்டது. இக்கூட்டத்தில் சங்கத் தின் பொதுச்செயலாளர் மா.பாலசுப்பிரமணியன், பொருளாளர் க.கோவிந் தன் மற்றும் நிர்வாகிகள் ஏ.நிஜாம், சி.விஜியகுமார், எஸ்.முருகசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சேலம்: சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள தமிழ் நாடு அரசு போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு அனைத்து தொழிற் சங்கத்தினர் பங்கேற்ற வாயிற் கூட்டம் நடைபெற் றது. இக்கூட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட கவுன் சில் செயலர் உதயகுமாரன் தலைமையும், சிஐடியு சங் கத்தின் செயலர் பழனி வேலு முன்னிலையும் வகித்தனர். இதில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து தொழி லாளர்களுக்கும் மாத ஊதியமாக குறைந்த பட் சம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும். போனஸ் உச்ச வரம்பு ரூ.3500-ஐ நீக்க வேண்டும். பணிக்கொடை ஆண்டுக்கு 30 நாள் ஊதி யம் என நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள் ளிட்ட 10 அம்ச கோரிக் கைகளை நிறைவேற்றக் கோரி நாடு தழுவிய அள வில் வருகிற 28-ம் தேதி அனைத்து தொழிற்சங்கங் கள் பங்கேற்கும் வேலை நிறுத்தம் நடைபெறு கிறது. இந்த வேலை நிறுத் தத்தை சேலம் மாவட்டத் தில் வெற்றிகரமாக்கும் வகையில் அனைத்து பணி மனைகள் முன்பும் தொழி லாளர் திரளாக பங்கேற் கும் வேலை நிறுத்தம் மற் றும் ஆர்ப்பாட்டம் நடத் துவது என முடிவு செய்யப் பட்டது. மேலும். சேலம் கோட்டை மைதானத்தில் இருந்து தொழிலாளர்கள் பேரணி புறப்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் எல்.பி. எப் பொதுச் செயலாளர் பெருமாள், சிஐடியு மாநில உதவித் தலைவர் தியாக ராஜன், ஏஐடியுசி சம் மேளன செயலாளர் முருக ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: