திருவாரூர், பிப். 21- மத்திய அரசின் தொழி லாளர் விரோதக் கொள்கை களை கண்டித்தும் இந்திய தொழில் சட்டங்களை மதிக் கக் கோரியும் பன்னாட்டு முதலாளிகளுக்கு வழங்கப் படும் எல்லையில்லா சலு கைகளை ரத்து செய்யக் கோரியும் மத்திய மாநில அரசு ஊழியர்களின் வாழ் வாதாரங்களை பாதுகாக்கக் கோரியும் முறைசாரா தொழி லாளர்களின் கோரிக்கை களை நிறைவேற்றக்கோரி வரும் 28ஆம் தேதியன்று இந்திய நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இந்த பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் வகையில் திருவாரூர் மாவட் டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு தயாரிப்புப் பணி கள் நடைபெற்று வருகின் றன. இதன் ஒரு பகுதியாக திருவாரூரில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடை பெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம். சௌந்தர்ராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் ஜி.பைரவநாதன் வரவேற்றுப்பேசினார். சங் கத்தின் மாநிலச் செயலாளர் ச.இ.கண்ணன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க மாநிலத் தலைவர் து.சிங்க ராயர் ஆகியோர் வேலை நிறுத்த அவசியம் குறித்து விளக்கிப்பேசினர். சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் வி.சோமசுந் தரம் நன்றி கூறினார். இந்த மாநாட்டில் மாவட்ட நிர் வாகிகள், வட்டக்கிளை நிர் வாகிகள் உட்பட நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர். வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டியதன் அவசியம் குறித்து திருவா ரூர் மாவட்ட அனைத்து வட்ட தலைநகரங்களில் வட்டாட்சியர் அலுவலகங் கள் முன்பாகவும் பல்வேறு அரசுத்துறை அலுவலகங் கள் முன்பாகவும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பாகவும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தீவிர பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. இதில் மாவட்ட நிர்வாகிகள், வட்டக்கிளை நிர்வாகிகள் பங்கேற்று வரு கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: