திண்டுக்கல், பிப்.21- பால் விலை, பஸ் கட்டண உயர் வால் அரசைவிட தனியாருக்கே லாபம் என்று சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் எம் எல்ஏ கூறினார். திண்டுக்கல்லில் நடைபெற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டில் கலந்துகொண்டு அவர் மேலும் பேசி யதாவது: குறைந்தபட்ச கூலிச்சட்டத்தை அமலாக்க மறுக்கின்றன அரசுகள். தொழிலாளியின் தேவை எதுவோ அதுதான் சம்பளமாக இருக்க வேண் டும். “இந்த நாட்டில் உள்ள சட்டங் களை திருத்த முடிவெடுத்தோம், ஆனால் தொழிலாளர்கள் எதிர்ப்பால் அந்த முடிவு கைவிடப்பட்டது” என்று சமீபத்தில் ஒரு மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியுள்ளார். இருக் கிற சட்டங்களை பாதுகாக்கவே நாம் பெரும்பாலான வேலைநிறுத்தங் களையும், போராட்டங்களையும் நடத் தியுள்ளோம். பெரும்பாலான தொழி லாளர் நலச்சட்டங்கள் இன்றுவரை அமலில் உள்ளதற்குக் காரணம் நமது போராட்டங்கள் தான். குறைவான கூலி தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஒரு ஆசிரியைக்கு ரூ.3 ஆயிரம் தான் சம்பளம். அவர்களுக்காக நாம் என்ன போராட்டம் நடத்தியுள்ளோம். அதைப் போல தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் நர்சுகளுக்கு ரூ.3 ஆயிரம் தான் சம்பளம். இதுபோன்று சிதறிக்கிடக்கும் தொழிலாளர்களைத் திரட்ட நாம் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது.இதை விடவும் மிகக் குறைவான கூலி பெறுபவர்கள் உள்ளனர். இதெல்லாம் இந்திய நாட்டின் இழிவு என்று நாம் வேதனையோடு பார்க்க வேண்டும். ஒரு பக்கம் லாபம் மலை போல் குவிகிறது. மறு பக்கம் ஏழ்மை நிலை பெருகுகிறது. திருப்பூரில் நாளுக்கு நாள் தொழிலாளர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது. இந்திய நாட்டு முதலாளிகளுக்கு மத்திய அரசு 21 லட்சம் கோடி ரூபாயை வரிச்சலுகை யாகக் கொடுத்துள்ளது. பெரு முதலாளிகளுக்கு தமிழக அரசு ஏராளமான சலுகைகளை வழங் கியுள்ளது. பன்னாட்டுத் தொழிற் சாலைகளுக்கு உயர் அழுத்த மின் சாரம் வழங்குகிறது. இந்த கம் பெனிகளுக்கு அரசு தடையில்லா மின்சாரம் தருவோம் என்றும் ஒரு வேளை மின்தடை ஏற்படுமானால் அதற்கு தண்டத் தொகையைத் தரு வோம் என்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு உள்ளது. மூலதனத் திரட்சி முதலாளிகளுக்குத் தேவை யான மூலதனத்தை மக்களிடமிருந்து திரட் டுகிறார்கள். எல்.ஐ.சி, வங்கி போன்ற நிதி நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைப்பது. அதிக வட்டிக்கு ஆசை காட்டி நிதி திரட்டுவது தான் மிகச் சுலபமான தொழிலாக உள்ளது. தற்போது 120 கம்பெனிகள் உள்ளன. அந்த திரட்டப்பட்ட நிதி எல்லாம் முத லாளிகளின் தேவைக்குப் பயன்படுத் தப்படுகிறது. இதுதான் மூலதன திரட்சி ஆகும். நாம் சுதந்திரம் பெற்ற பிறகு இந்த மூலதன திரட்சி முதலாளி களிடம் சென்றுவிடக்கூடாது என்று தான் வங்கிகள், நிதி நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டன. ஆனால் அது இன்று தலைகீழாக மாறி நிதி மூலதனம் இந்திய முதலாளிகள் வசம் சென்று விட்டது. நிதி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்கிறோம். ஆனால் அரசு நடத்தினால் நஷ்டம் ஏற்படுவதாகக் கூறுகிறார்கள். நஷ் டம் ஏற்பட்டாலும் மானியம் கொடுத்து நடத்த வேண்டும் என்று நாம் கூறு கிறோம். இதெல்லாம் எங்கள் வேலை இல்லை என்கிறார் பிரதமர் மன் மோகன். இதெல்லாம் உங்கள் வேலை இல்லை என்றால் வேறு எது தான் பிர தமர் வேலை. பால்விலை, பஸ் கட்டண உயர்வு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் பால் விலையையும், பஸ் கட்டணத் தையும் உயர்த்தியது. கேட்டால், ஆவின் பால் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக முதல்வர் கூறினார். இன்றைக்கு தமிழ்நாட்டில் 66 தனியார் பால் நிறுவனங்கள் உள்ளன. 40 லட் சம் லிட்டர் பால் தனியார் பால்நிறு வனங்கள் கொள்முதல் செய்கின்றன. ஆவின் நிறுவனம் 20 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. ஆக இந்த பால் விலை உயர்வு ஆவினுக்கு சாதகமாக இருக்கிறதோ, இல் லையோ, 66 தனியார் பால் நிறு வனங்களுக்கு சாதகமாக உள்ளது. தனியார் பால் நிறுவனங்களும் தங் களது பால்விலையை ஏற்றிவிட்டன. இதே போல் பஸ் கட்டணமும் ஏற் றப்பட்டது. கடந்த 2 மாதங்களில் அர சின் இந்த பஸ் கட்டண உயர்வின் கார ணமாக தனியார் கம்பெனி பேருந்து களுக்கு நல்ல வசூல். மக்கள் அரசு பேருந்துகளில் பயணிப்பதைத் தவிர்க்கிறார்கள். சென்னை போன்ற நகரங்களில் 5 லட்சம் பயணிகள் பேருந்து பயணத்தை நிறுத்திக் கொண்டனர். ஆனால் ஆம்னி பஸ்கள் பெருகிக் கொண்டே உள்ளன. லாபம் இல்லாத வழித்தடங்களில் அரசு பஸ் ஸும், லாபம் ஈட்டும் வழித்தடங் களில் தனியார் பேருந்தும் பயணிக் கின்றன. இது மாநில அரசின் கொள் கை முடிவாகும். இதை மாற்ற முடி யாது. ஆக பால் விலை உயர்வும் பேருந்து கட்டணமும் தனியார் கம் பெனிகளின் கொள்ளை லாபத்திற்குத் தான் பயன்படுமே ஒழிய அரசின் நஷ்டத்திற்கு ஈடுசெய்ய உதவாது. எனவே பிப்ரவரி 28ம் தேதி வேலைநிறுத்தம் பற்றி பிரச்சாரம் செய் யும் போது மக்கள் பிரச்சனைகளை யும் இணைத்துப் பேசுங்கள். வேலை நிறுத்தத்தை நாம் வெற்றிகரமாக்கிட வேண்டும் என்று அ.சவுந்தரராசன் பேசினார்.

Leave A Reply

%d bloggers like this: