ஒன்றாக இருந்த தஞ்சை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு தமிழக உழைப் பாளி மக்களின் வரலாற்றின் புகழ் மிக்க பகுதியாகும். தமிழகத்தின் நெற்களஞ் சியம் என புகழப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் அவல நிலையில் வாழ்ந்து கொண்டு அந்த நெற் களஞ் யத்தை நிரப்பிக் கொண்டிருந்த பண்ணை அடிமைகளை தலைநிமிரச் செய்து வலுமிக்க மனிதர்களாக மாற்றிய இயக்கம் அது. விளைச் சலில் மிகப்பெரும் பகுதியை நிலப்பிரபுக் களுக்கு கொடுத்து விட்டு வறுமையில் வாடிய ஏழை எளிய விவசாயிகளை வர்க்கப் போராட்டம் மூலம் உயர்த்திய இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம். பண்ணையடிமை 1942ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாறிய உலகச் சூழ லில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீது 1934ஆம் ஆண்டில் விதித் திருந்த தடையை ஆங்கிலேய அரசாங்கம் ரத்துச் செய்து சிறை யில் இருந்த கம்யூனிஸ்ட்டு களை விடுதலை செய்தது. அதையடுத்து திருச்செங் கோட்டில் நடைபெற்ற கம்யூ னிஸ்ட் கட்சியின் அமைப்புக் கூட்டத்தில் மாநில கட்சி அமைப்பு உருவாக்கப்பட்டது. மோகன் குமாரமங்கலம் செய லாளராகவும், எம்.ஆர்.வெங்கட் ராமன் உதவிச் செயலாள ராகவும் தேர்ந்தெடுக்கபட்ட னர். இந்தக் கூட்டமானது தஞ்சை மாவட்டத்தில் நிலவும் பண்ணை அடிமை முறையை ஒழித்துக் கட்டுவது தனது பிரதானப் பணியென்று முடிவு செய்தது. அதற்கான பொறுப்பு மாநிலக் குழு உறுப்பினர் பி.சீனிவாசராவிடம் விடப்பட்டது. தஞ்சைக்கு வந்த சீனிவாசராவ் காங்கிரஸ் சோசலிஸ்ட் என்ற பெயரால் ஏற்கனவேயே கம்யூனிஸ்டுகள் உருவாக்கி யிருந்த இயக்கத்தைப் பயன்படுத்தி பண்ணை அடிமைகளை திரட்ட ஆரம்பித்தார். இதில் அவருக்கு மிகவும் உறுதுணை யாக இருந்தது மணலி கந்தசாமி, மன்னார்குடி அமிர்தலிங்கம், நாகை கே.பி. நடராஜன், வெங்கடேச சோழகர், சோழபாண்டி ஏ.ஆர். ராமானுஜம், களப்பால் சின்னகுப்பு, பெரியகுப்பு சகோதரர்கள் போன்றோர் ஆவர். நிலப்பிரபுக்களிடம் சவுக்கடிபட்டு மாட்டுச்சாணத்தை கரைத்துக் குடிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்த, கொத் தடிமையாகக் கிடந்த லட்சக்கணக்கான பண்ணை அடிமை களுக்கு சீனிவாசராவின் வருகை பெரும் நம்பிக்கை ஒளியா கப்பட்டது. பண்ணை அடிமைகளில் கணிசமான பகுதியினர் தலித் மக்கள். இதரர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர், தேவர் சமூகப்பிரிவினர். ‘உன்னை யாராவது அடித்தால் திருப்பி அடி’ என்று சீனி வாசராவ் கூறியது பண்ணை அடிமைகளுக்கு பெரும் உத்வே கத்தை ஏற்படுத்தியது. கம்யூனிஸ்டுகளின் பிரச்சாரத்தால் பல நூற்றுக்கணக்கான கிராமங்கள் போர்க் களங்களாகின. பொங்கியெழச்செய்யப்பட்ட பண்ணை அடிமைகள் பெரும் தாக்குதலில் இறங்கினர். பல நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர் என்ற போதும் ஆணும் பெண்ணுமாக பல்லாயிரக்கணக்கானோர் போராட்டக்களத்தில் இறங்கிய தானது தஞ்சை மாவட்ட நிலப் பிரபுக்களைக் கலங்கச் செய்தது. நிலைமை கட்டுக்கடங்காது போய்விடும் என்றுணர்ந்த அன்றைய சென்னை மாகாண அரசாங்கம் ஒரு முத்தரப்பு மாநாட்டைக் கூட்டும்படி நிர்ப்பந்தப்படுத்தியது. இதைத் தொடர்ந்து 1946ஆம் ஆண்டில் மன்னார்குடியில் ஒரு ஒப்பந் தம் ஏற்பட்டது. இதன் முக்கிய அம்சமானது பண்ணையாட் களை சாட்டையால் அடிக்கக் கூடாது, சாணிப்பால் குடிக்கச் செய்வது நிறுத்தப்படும் மற்றும் முத்திரை போட்ட மரக்காலில் தான் நெல் அளக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் விவசாய சங்கத்தின் சார்பில் மன்னார்குடி அமிர்தலிங்கம், களப்பால் குப்புசாமி, ராஜகோபால் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த மகத்தான ஒப்பந்தத்தின் மூலம் பல நூற்றாண்டு காலமாக அமலில் இருந்த பண்ணை அடிமை முறை நிரந்தர மாக ஒழிக்கப்பட்டது என்பதுதான். இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் புகழ் பெற்ற சாதனைகளில் இதுவும் ஒன்றாகும். கட்சி மீது தடை தஞ்சை மாவட்டத்தில் கட்சியும் விவ சாயிகளின் இயக்க மும் வெகு வேகமாக முன்னேறி வரும் நேரத்தில், 1948ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் சார்பு அமைப்புகளும் நேரு அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் ஏராளமான தலைவர் களும், ஊழி யர்களும் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டனர். ஏராளமா னோர் தலை மறைவாகச் சென்று கட்சிப் பணி செய் தனர். மணலூர் மணியம்மா கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் சிறையில் கே.பி.ஜானகியம்மாவுடன் அடைக்கப் பட்டார். 1948-51ஆம் ஆண்டுகள் தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட் இயக்கம் கொடிய அடக்குமுறைகளைக் கண்டு ரத்தம் சிந்திய ஆண்டாகும். கம்யூனிஸ்ட் செயல் வீரர்களான இரணியன், சிவராமன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் போன்றோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். வீரர் களப்பால் குப்பு நிலப்பிரபுக்களின் சதியால் திருச்சி சிறையில் விஷம் கொடுத்து கொல்லப்பட் டார். நடுவகளப்பால் நடேசன், செந்தாமரைக்கண் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சாள், நல்லூர் ஆற்றங்கரைத்தெரு கே.வைரவன், கழுகத்தார்காத்தான் ஆகிய நான்கு தோழர்கள் இக்காலகட்டத்தில் கொல்லப்பட்டனர். 1949ஆம் ஆண்டில் கோட்டூர் இருள்நீக்கி கோத்திரயம் கிராமத்தைச் சேர்ந்த தோழர் ராஜு நிலப்பிரபுக்களின் குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். மன்னார்குடி அமிர்தலிங்கம், பி.எஸ். தனுஷ்கோடி, கே.ஆர். ஞானசம்பந்தம் உள்ளிட்ட ஏராளமானோர் திருச்சி மற்றும் வேலூர் சிறைகளில் கொடிய தாக்குதல்களுக்கு ஆளானார்கள். தனுஷ்கோடி உள்ளிட்ட பலர் மீது வழக்குகள் போடப்பட்டு நீண்டகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தலைமறைவாக இருந்து செயல்பட்ட ஏ.எம். கோபு, கோ.பாரதிமோகன் போன்றோர், கோனேரிராஜபுரம் மற்றும் காஞ்சிவாய் விவசாயிகளின் வீரப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி நடத்தினர். பின்னர் அவர்களும் வேறு பல தோழர்களும் கைது செய்யப்பட்டு சித்ரவதைகளுக்கு ஆளாகினர். 5 ஆண்டுகள் சிறையில் இருந்தனர். கம்யூனிஸ்ட் தலைவர் மணலி கந்தசாமியை வலைவீசித் தேடிய காவல்துறையினர் கிராமங்களில் புரிந்த அட்டூழியங் களுக்கு அளவே இல்லை. அவர் தலைக்கு பெரும் விலை வைக்கப்பட்டது. கட்சி உடைந்தது 1950ம் ஆண்டுகளின் நடுப் பகுதியிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்குள் உருவெடுக்கத் தொடங்கிய கருத்து மாறுபாடு 1964ம் ஆண்டில் வெடித்தது. அவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் கட்சியின் உயர்மட்ட அமைப்பான தேசியக் கவுன்சில் இருந்து பி.சுந்தரய்யா, ஏ.கே.கோபாலன், சுர்ஜித், பி.ராமமூர்த்தி, ஜோதிபாசு, எம்.ஆர்.வெங்கட்ராமன், என். சங்கரய்யா, கே. ரமணி உள்ளிட்ட 32 உறுப்பினர்கள் வெளியேறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினர். தமிழகத்தைப் பொறுத்தமட்டில் கும்பகோணத்தில் நடை பெற்ற மாகாணக் கவுன்சில் கூட்டத்திலிருந்து பி.ராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்ராமன், என்.சங்கரய்யா, ஏ.பாலசுப்ரமணியம், வி.பி.சிந்தன், கே.ரமணி, கோ.வீரய்யன், கே.ஆர்.ஞான சம்பந்தம், கோ.பாரதிமோகன், பி.எஸ்.தனுஷ்கோடி, நாகூர் முருகையன், எஸ்.வடிவேல் உள்ளிட்டு 29 பேர் வெளி நடப்பு செய்து தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் பணியில் இறங்கினர். தில்லியில் கட்சி பிளவுபட்டவுடன் தமிழகத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் பொருட்டு ஏப்ரல் 28, 29 தேதிகளில் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. தஞ் சை மாவட்டத்திலிருந்து இக்கூட்டத்தில் ஆர்.முருகையன், பி.எஸ். தனுஷ்கோடி, கே.ஆர்.ஞானசம்பந் தம், கோ.பாரதி மோகன், கோ.வீரய் யன், நாகை ஜி.பக்தவத்சலம், வழக்கறிஞர் ஆர்.ரெங்கன் உள்ளிட்டு 52 பேர் பங்கேற்றனர். இக்கூட்டம் தான் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உரு வாக்கியது. சின்னப்பிள்ளை போன்ற விவசாய சங்க ஊழியர்கள் பலர் கொல்லப்பட்ட னர். 1968ம் ஆண்டு டிசம்பர் 25ந் தேதி வெண்மணி கொடூரச்சம்பவம் நடை பெற்றது. விவசாயத் தொழிலாளர் குடும் பங்களைச் சேர்ந்த ஆண், பெண், குழந்தை கள் என 44 பேர் நிலப் பிரபு கோபாலகிருஷ்ண நாயுடு என்ற கொடியவனின் குண்டர் கும்ப லால் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட் டனர். மனித இனத்தின் மனச் சாட்சியையே உலுக்கிய கொடூர நிகழ்ச்சி இது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தக் கொலையைச் செய் தவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்; விவசாயத் தொழி லாளர்களின் கூலி உயர்வு கோரிக்கை ஏற்கப்பட வேண்டு மென்றும் கிளர்ச்சிகள் செய்தது. இதன் விளைவாக உருவானது தான் கணபதியாபிள்ளை கமி ஷன். அது கீழத்தஞ்சைப் பகுதியில் உள்ள விவசாயத் தொழிலாளருக்கு கூலி உயர்வு சிபாரிசு செய்தது. 1968ம் ஆண்டில் விவ சாயத் தொழிலாளிகளின் வேலை வாய்ப்பைக் குறைத்திடும் முறையில் முதன் முதலாக டிராக்டர் இயந் திரம் வலிவலம் தேசிகர் பண்ணையில் நுழைக்கப்பட்ட பொழுது கட்சித் தலைவர் எம்.செல்லமுத்துவின் தலைமையில் வயலில் படுத்து மறியல் போராட்டத்தை துவங்கியது. ஆனால் அவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி அட்டூழியம் புரிந்தது. மறியல் செய்த செல்லமுத்துவின் அடி வயிற்றில் காவல்துறை ஆய்வாளர் ஒருவர் ஓங்கி ஓங்கி மிதித்ததில் அவரது சிறுநீரகமே பாதிக்கப்பட்டது. படுகாயப்படுத்தப்பட்ட செல்லமுத்துவும், இதரதோழர்களும் கைதுசெய்யப்பட்டு 3 மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டனர். அவசர நிலைப் பிரகடனம் அமலில் இருந்த 1976 ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி திமுக அரசு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி மீதும் திமுக மீதும் அடக்குமுறை ஏவப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் கே.ஆர்.ஞானசம்பந்தம், என்.வெங்கடாசலம், கோ.பாரதி மோகன், பி.எஸ்.தனுஷ்கோடி, என்.மணியன், நாகை கே.இடும்பையன், பி.வெங்கடாசலம், புதுக்குடி சோமசுந்தரம் போன்ற மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள் ‘மிசா’ சட்டப்படி கைது செய்யப்பட்டு ஓராண்டு திருச்சி சிறையிலடைக்கப்பட்டனர். கோ.வீரய்யன் தலைமறைவாக யிருந்து செயல்பட்டார். அடுத்துவந்த கால கட்டங்களில் நாகை உருட்டாலை தொழிலாளர்கள் போராட்டம், கும்பகோணம் மற்றும் சுவாமி மலை கைத்தறித் தொழிலாளர்கள் போராட்டம், கும்பகோணம் எஸ்.ஆர்.வி.எஸ். தொழிலாளர்கள் போராட்டமென்று ஏராளமான தொழிற்சங்கப் போராட்டங்கள் நடைபெற்றன. ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், ஜனநா யக வாலிபர் சங்கம் ஆகிய ஒவ்வொரு அமைப்பும் தங்கள் பங் கிற்கு ஏராளமான போராட்டங்களை நடத்தியது குறிப்பிடத் தக்கதாகும். தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவரும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதிப்புமிக்க தலைவருமான தஞ்சை என்.வெங்கடாசலம் 1977 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதியன்று சுயநல சக்திகளால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். கட்சிக்கு மிகப்பெரிய இழப்பாக இது அமைந்தது. 1982ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதியன்று சிஐடியுவும், ஏஐடியுசியும் கூட்டாகச் சேர்ந்து பொது வேலை நிறுத்த அறைகூவல் விடுத்தது. இதற்கு ஆதரவாகவும் அதிமுக அரசின் செயல்பாடுகளை எதிர்த்தும் தஞ்சை மாவட்டத்தில் இந் திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் வேலைநிறுத்தம் நடத்தின. திருமெய்ஞானம் என்ற கிராமத்தில் காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி அஞ்சான், நாகூரான் ஆகிய இரண்டு விவசாயத் தொழிலாளிகளை சுட்டுக்கொன்றனர். பலர் குண்டுக் காயம் அடைந்தனர். அவர்களில் ஞானசேகரன் என் பவர் மருத்துவமனையில் மரணமடைந்தார். 22 பேர் மீது எம் .ஜி.ஆர். அரசு வழக்குத் தொடுத்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதி வசூலித்து இந்த வழக் கை நடத்தி அனை வரையும் விடுதலை செய்ய வைத்ததோடு, தியாகிகள் குடும்பங்க ளுக்கு நிதி உதவியும் செய்தது. 1994ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதியன்று டங்கல் திட்டத்தை (காட் ஒப்பந்தம்) எதிர்த்து நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்ற பொழுது, குடவாசலில் தபால் நிலையம் முன்பு மறியல் போராட் டம் நடைபெற்றது. அந்த மறியல் வீரர்கள் மீது அதிமுக வைச் சேர்ந்த குடவாசல் ராஜேந்திர னும் அவருடைய கட்சிக்காரர் களும் தாக்கியதில் மார்க் சிஸ்ட் ஊழியர் தங்கையன் அதே இடத்திலேயே நினை விழந்தார். தஞ்சை மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்ட அவர், அங்கே உயிரிழந் தார். கொலையாளி கைது செய் யப்படவில்லை. மாறாக அமைச் சரின் காரில் வலம் வந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்வீரர் ஜெ. நாவலன் கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதியன்று சமூக விரோதிகளின் கொலை வெறிக்குப் பலியானார். ஒன்றாகயிருந்ததும் தற்பொழுது தஞ்சாவூர், திரு வாரூர் மற்றும் நாகப்பட் டினம் என்று மூன்றாகப் பிரிந்துள்ள மாவட்டங்க ளில் கம்யூனிஸ்ட் இயக் கத்தின் வரலாறு என்பது வீரம்செறிந்த காவியமாகும். ஈடு இணையற்ற தியாகத் தின் வெளிப்பாடு ஆகும். பண்ணையடிமைத்தனம் என்ற பல நூற்றாண்டுக் கால சமூகக் கொடு மைக்கு இறுதி முடிவு கட்டிய இயக்கமாகும். இன்று ஒன்றாகயிருந்த தஞ்சை மாவட்டத்தின் விவசாயத் தொழிலாளி களும், ஏழை, எளிய விவசாயிகளும் நெஞ்சு யர்த்தி பீடு நடை போடு வது அந்த மகத்தான கம் யூனிஸ்ட் இயக்கத்தின் சாதனையாகும்.

Leave A Reply

%d bloggers like this: