சிட்னி, பிப்.21- தன்னுடைய ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது என்று ஆஸ்திரேலி யாவின் முன்னாள் அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் கூறி யுள்ளார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் முறைப்படி அறிவிக்கவில்லை. 37 வயதான ரிக்கிபாண்டிங் ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக் கெட் அணியிலிருந்து நீக்கப் பட்டார். அதற்குப்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். ஆனால் தொடர்ந்து டெஸ்ட் ஆடப் போவதாக அவர் கூறினார். ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் எதிர்காலத் திட்டங் களில்தான் இடம்பெறவில் லை என்று தேசிய தேர்வாளர் ஜான் இன்வெராரிட்டி தன் னிடம் தெளிவுபடுத்திவிட்டார் என்று பாண்டிங் சொன்னார். இந்தியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட்டுகளில் அவர் அபார மாக ஆடி 544 ஓட்டங்களை குவித்தார். ஆனால் நடைபெறும் ஒரு நாள் போட்டிகளில் அவர் ஐந்து ஆட்டங்களில் 18 ஓட் டங்கள் மட்டுமே எடுத்தார். இத னால் பொறுமை இழந்த தேர் வுக்குழு அவரை அணியிலி ருந்து நீக்கிவிட்டது.

Leave A Reply

%d bloggers like this: