புதுதில்லி, பிப். 21 – தலைநகர் தில்லியில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உள வாளி ஒருவர் கைது செய் யப்பட்டார். அவரிடம் பாதுகாப்புத்துறை ஆவ ணங்கள் இருந்தன என்று கூறப்படுகிறது. கொல்கத்தாவைச் சேர்ந்த கம்ரன் அக்பர் என் பவர் புதுதில்லி ரயில்வே நிலையம் அருகே பிப்ரவரி 13 அன்று கைது செய்யப் பட்டார். கம்ரன் அக்பர் பற்றி உளவுச் செய்திகள் கிடைத்தவுடன் அவருக்கு வலை விரிக்கப்பட்டது என்று மூத்த காவல்துறை அதிகாரி கூறினார். கராச்சியைச் சேர்ந்த கம்ரன் அக்பர் இந்தியப் பெண்ணை மணந்து கொண்டு கொல்கத்தாவில் வசித்து வருகிறார். அவரி டம் இந்திய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) உள்ளது.

Leave A Reply