கோவை,பிப்.21- கோவை வெள்ளலூ ரில் உள்ள ஒரு பஞ்சு மில் லில் திங்களன்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. கோவை சிங்காநல் லூரை அடுத்துள்ள நீலிக் கோணம்பாளையத்தைச் சேர்ந்த சுப்பையன் என்ப வர்போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூரில் பஞ்சு மில் நடத்தி வரு கிறார். இந்நிலையில் திங்க ளன்று இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தக வல் அறிந்ததும் தீயணைப் புப் படையினர் சென்று தீயை அணைத்தனர். இவ் விபத்தில், மில்லில் இருந்த சுமார் 2 லட்சம் மதிப்பி லான பஞ்சு எரிந்து நாசம் ஆனது. இதுகுறித்து போத் தனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Leave A Reply

%d bloggers like this: