திருநெல்வேலி, பிப்.21- வரலாறு காணாத மின் வெட்டைக் கண்டித்து களக்காட்டில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத் திற்கு தாலுகாகுழு உறுப் பினர் டி.பார்த்தீபன் தலை மை தாங்கினார். கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் வழக்கறிஞர் முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் என்.எஸ். கணே சன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.ஷைலஜா, தாலுகா செயலாளர் எம்.எஸ்.சிவசாமி ஆகி யோர் உரையாற்றினர். பத்து பெண்கள் உட் பட நூற்றுக்கும் மேற்பட் டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன முழக்கம் எழுப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.