திருவாரூர், பிப். 21- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் மற்றும் சுமைப்பணி தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்திடக்கோரி திருவாரூரில் விளமல் நுகர் பொருள் வாணிபக்கழக முதுநிலை மேலாளர் மண்டல அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் மற் றும் சுமைப்பணித் தொழிலாளர்களை நிரந்தரம் செய்து, அடையாள அட்டை வழங்கி, காலமுறை ஊதியம் மற்றும் ஓய்கூதியம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் வழங்கிட வேண்டும். அனைத்து கொள்முதல் நிலையங்களுக்கும் சொந்தக்கட்டிடம் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். டிபிசி ஊழியர்களை நிர்ப்பந்தப்படுத்தி தவறு செய்ய தூண்டக்கூடாது. இரட்டைக் கொள் முதலைக் கைவிட்டு அரசு இலக்கை எட்ட பரவ லாக்கப்பட்ட ஏகபோக கொள்முதலை அமல்படுத்த வேண்டும். சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு ஏற்றுக்கூலி, இறக்குகூலி டன் ஒன்றுக்கு 50 ரூபாய் வழங்க வேண்டும். விளமல் சேமிப்புக்கிடங்கு சுமைப்பணித் தொழி லாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டப் பொருளாளர் எம்.பி.கே.பாண்டியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக (சிஐடியு) பொதுத் தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் ஆர்.புவனேஸ்வரன், சிஐடியு மாவட் டச் செயலாளர் நா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். டிஎன்சிஎஸ்சி மண்டலத் தலைவர் ஜி.பழனிவேல், பொதுத் தொழிலாளர் சங்க மண்டலச் செயலாளர் டி.பாஸ்கரன், சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.நாகராஜன், முறைசாராத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம். அசோகன், கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் டி.முருகையன் உட்பட பல்வேறு அரங்க நிர் வாகிகளும், நுகர்பொருள் வாணிபக்கழக ஊழி யர்களும், சுமைப்பணி தொழிலாளர்களும் பெரு மளவில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.