உடுமலை, பிப்.21- உடுமலையில் தொடர் மின்வெட்டினை கண் டித்து வாலிபர் சங்கத்தி னர் விளக்கேற்றி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கடுமை யான மின்வெட்டு அமல் படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் தொழில் அமைப் பினர் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர். மேலும், தேர்விற்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகள் மற் றும் நோயாளிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வரு கின்றனர். இவைதவிர மின் வெட்டை சாதகமாக பயன்படுத்தி சமூக விரோ திகள் குடியிருப்பு பகுதிக ளில் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாக தெரி வித்து வாலிபர் சங்கத்தி னர் நூதன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். உடு மலையில் உள்ள ருத்ரப்ப நகர் குடியிருப்பு பகுதி பொதுமக்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைமையில் மின் வெட்டை கண்டித்து விளக்கேற்றி ஆர்ப்பாட் டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு வாலிபர் சங்கத்தின் தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் சி.சுப் பிரமணியம் விளக்கேற்றி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். இதில் சங்கத்தின் நிர் வாகிகள் கி.கனகராஜ், லோகநாதன், சுதா சுப்பிர மணியம், என்.கிருஷ்ண சாமி, ஜெகதீசன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த திர ளான பொதுமக்கள் கலந்து கொண்டு மின்வெட்டுக்கு எதிராக கண்டன முழக்கங் களை எழுப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.