புவனேஷ்வர், பிப். 21 – தேசிய தீவிரவாத தடுப்பு மையம் சட்டப்பூர்வமற்றது. அதன் அதிகாரம் மற்றும் செயல்பாடு குறித்து மாநி லங்களுடன் மத்திய அரசு உடனடியாக ஆலோசனை நடத்த வேண்டும். இதன் பின்னரே, மத்திய உள்துறை 2012 பிப்ரவரி 13 அன்று பிறப் பித்த உத்தரவு, உரிய மாற்றங் களுடன் வந்தால்தான் செயல்படுத்த முடியும் என ஒடிசா முதல்வர் நவீன்பட் நாயக் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, திங்கட்கிழமை மீண்டும் கடிதம் எழுதினார். 2012 பிப்ரவரி 13 அன்று உள்துறை விவகாரம் தொடர்பான மத்திய அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்திற்கு இதுவரை பதில் வராதது ஆச்சரியத்தை அளிக்கிறது. எனவே, மாநில அரசுகளுடன் மத்திய அரசு உடனடியாக ஆலோசனை நடத்த வேண்டும். தீவிரவா தத்திற்கு எதிராக போராடும் மத்திய அரசின் நடவடிக் கைக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் நவீன் பட்நாயக் தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு என்பது நமது லட்சியம் தனித்துவமானது. இவ்விஷ யத்தை தன்னிச்சையாக மத்திய அரசு கையாளுவதை எதிர்க்கிறேன் என பட் நாயக் விமர்சித்தார். தேசிய தீவிரவாத தடுப்பு மைய விவகாரத்தை அரசி யல் பிரச்சாரமாக மேற் கொள்ளும் எண்ணம் தமக்கு இல்லை என்றும் பிரதம ருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தேசிய தீவிரவாத தடுப்பு மைய அமைப்பதற்கு பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமா ரும் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளார். பல்வேறு மாநிலங்கள் எதிரொலித்த கருத்துப்படி தேசிய தீவிர வாத தடுப்பு மையம் திட் டம் மாற்றப்பட்ட வேண் டும் என்றார். தீவிரவாத தடுப்பு மையத்திற்கு இதுவரை 11 மாநில முதல்வர்கள் எதிர்ப் புத் தெரிவித்து பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். தீவிரவாத தடுப்பு மையம் மார்ச் 1ம்தேதி துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் மாநில அரசுக ளின் அதிகாரத்திற்குள் மத் திய அரசின் ஊடுருவலாக அமைந்துள்ளது என்று அம்மாநில முதல்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.