சென்னை, பிப். 21- சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி கண்காட்சி திட லில் பிப். 10 அன்று துவக்கப் பட்ட தேசிய கைத்தறி கண் காட்சி 2012, தொடர்ந்து மார்ச் 5 வரை நடைபெற்ற உள்ளது. இந்த கண்காட்சியில், காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரையிலான அனைத்து மாநில துணி வகைகளை வாடிக்கையாளர்கள் பெரு மளவில் வாங்கிச் சென்றதன் பயனாக, இதுவரை ரூ.102.00 லட்சம் அளவிற்கு விற்பனை யாகி உள்ளன. இந்த கண்காட்சி மக்க ளிடையே பெருத்த வர வேற்பைப் பெற்றுள்ளது என்பது தெரிய வருகிறது. இக்கண்காட்சி இனிமேல் காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடை பெறும். நுழைவு கட்டணம் எதுவும் கிடையாது. கண் காட்சியில் விற்பனையாகும் இரகங்களுக்கு சிறப்பு தள் ளுபடியும் வழங்கப்படு கிறது. பொது மக்களின் நல னுக்காக பட்டு ரகங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, கோ-ஆப்டெக்ஸ் நிறுவ னம் தனது வாடிக்கையாளர் களிடமிருந்து பாரம்பரிய மிக்க பட்டுப்புடவைக ளைப் பெற்று, இந்த கண் காட்சியில் பார்வைக்கு வைத்து, பட்டுத் துணி களைப் பராமரித்தல் குறித்து விளக்கம் தரப்படுகிறது. இந்த கண்காட்சியில் வாடிக் கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட 1912 ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரையிலான 80 வருட பாரம்பரியமிக்க பட் டுப் புடவைகள் வாடிக்கை யாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது ஒரு சிறப்பு அம்சமாகும். கடந்த வருடம், தேசிய கைத்தறி கண்காட்சிக்கு 3 லட்சம் மக்கள் வருகைபுரிந் தமையால் ரூ.3 கோடி அள விற்கு விற்பனை சிறப்பாக நடைபெற்றது. அதேபோன்று, இந்த வருடம், சுமார் 5 லட் சம் மக்கள் கண்காட்சிக்கு வருகைபுரிவார்கள் எனவும், ரூ.5.00 கோடி அளவிற்கு விற் பனையாகும் என்றும் எதிர் பர்ர்க்கப்படுகிறது. தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் பிரசித்திப் பெற்று விளங்கும் 110 கைத் தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பங்கேற்று, தங் களது மாநிலங்களில் உற் பத்தியாகும் பிரத்தியேகத் துணி ரகங்களை வாடிக்கை யாளர்களின் கண்ணையும் கருத்தையும் கவரும் வண் ணம் காட்சிக்கும், விற்பனைக் கும் வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: