திருநெல்வேலி, பிப்.21- பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பிப் ரவரி 28 ம் தேதி சி.ஐ.டி.யு உட்பட 11 முக்கிய சங்கங் கள் இணைந்து அகில இந்திய அளவில்மாபெரும் வேலைநிறுத்தத்தில் ஈடு பட உள்ளன. இந்த வேலை நிறுத்தத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகை யில் நெல்லை பி.எஸ்.என்.எல். ஊழி யர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர்சங்கம், எல்.ஐ.சி.ஊழியர் சங்கம், தபால் தந்தி ஊழியர்கள் சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து பாளையங் கோட்டையில் தெரு முனை பிரச்சாரக் கூட்டங் களை நடத்தின . பாளை மார்க்கெட், தெற்கு பஜார், ஆயிரத்தம் மன் கோவில் அருகில் என்று தெருமுனை பிரச் சார கூட்டங்கள் நடை பெற்றன. பிரச்சாரக் கூட் டங்களுக்கு பி.எஸ். என்.எல். ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் டி. கோபாலன் தலைமை தாங்கினார். இதில் ஏரா ளமானோர் கலந்து கொண்டனர் .

Leave a Reply

You must be logged in to post a comment.