திருப்பூர், பிப்.21- திருப்பூர் ஆலுக்காஸ் நகைக் கடையில் பின்பக்க ஜன்னல் கம்பி களை கேஸ் வெல்டிங் மூலம் வெட்டி உள்ளே புகுந்து ரூ.12 கோடி மதிப் புள்ள தங்க வைர நகைகளை கொள் ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். திருப்பூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள குமரன் சாலையில் ஆலுக்காஸ் ஜூவல்லரி நகைக்கடை அமைந்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஆண்டோ என் பவர் இக்கடை உரிமையாளர் ஆவார். இக்கடையை அதே ஊரைச் சேர்ந்த ராஜ்மோகன் (34) நிர்வாகம் செய்து வருகிறார். செவ்வாயன்று காலை 9.45 மணி யளவில் வழக்கம் போல் கடை ஊழி யர்கள் வந்து கடையைத் திறந்தனர். உள்ளே நுழைந்தபோது கடை ஷோகேஸில் வைத்திருந்த அனைத்து நகைகளும் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் 38 கிலோ எடையுள்ள 4ஆயிரத்து 750 பவுன் தங்க நகை களும், 340 காரட் வைர நகைகளும் கொள்ளை போனது தெரியவந்தது. எனினும் லாக்கரில் இருந்த 30 கிலோ நகைகள் தப்பின. பாதுகாப்புக் குறைபாடு பிரபலமான இந்த நகைக்கடை யில் அலாரம் கருவி பொருத்தப்பட் டிருக்கவில்லை. மேலும் உள்ளே தொடர் கண்காணிப்புக்காக வைக் கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமிராக் களும் கடை செயல்படும் நேரத்தில் மட்டுமே இயங்கும் விதத்தில் கணி னியுடன் பொருத்தப்பட்டிருந்தது. எனவே கடை மூடப்பட்டவுடன் சிசிடிவி கேமிராவும் இயங்காது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இக்கடை யில் இத்தகைய கண்காணிப்புக் குறைபாடுகள் இருப்பதை நோட்டம் விட்டு தெளிவாகத் திட்டமிட்டே கொள்ளையர்கள் இந்த பெரும் கொள்ளைச் சம்பவத்தை நிகழ்த் தியுள்ளது தெரிகிறது.

Leave A Reply

%d bloggers like this: