சென்னை, பிப். 21- பொதுமக்களோடு இணைந்து வாழும் வகை யில், குடிசை மாற்று வாரி யம் மற்றும் அரசு வாடகை வீடு திட்டத்தில், திருநங்கை களுக்கு வீடு ஒதுக்க, அரசு நடவடிக்கை மேற்கொண் டுள்ளது. திருநங்கைகளின் நலவாரிய செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்காக, திரு நங்கைகளின் கலந்துரை யாடல் கூட்டம், சென்னை யில் திங்களன்று (பிப். 20) நடந்தது. இதற்கு, அமைச் சர் வளர்மதி தலைமை வகித்தார். அப்போது, பொதுமக்க ளோடு இணைந்து வாழும் வகையில், திருநங்கைக ளுக்கு குடிசைமாற்று வாரி யம் மற்றும் அரசின் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு களில் வீடு ஒதுக்க வேண் டும்; 40 வயது நிரம்பிய திரு நங்கைகளுக்கு அரசு பென் ஷனும், அரசு வேலையில் இட ஒதுக்கீடும் வேண்டும்; அரசு படிவங்களில் மூன் றாம் பாலினமாக, திருநங்கை களை சேர்க்க வேண்டும்; திருநங்கைகள் திருமணம், அவர்கள் குழந்தைகளைத் தத்தெடுத்தல் ஆகியவற் றுக்கு, சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் என, 10 கோரிக் கைகளை அமைச்சரிடம் வழங்கினர். திருநங்கைகளின் கோரிக் கைகளை ஏற்று, அமைச் சர் வளர்மதி கூறியதாவது: சமூகநலத்துறை எடுத் துள்ள கணக்கெடுப்பில், இதுவரை, 3,872 திருநங்கை கள் கண்டறியப்பட்டுள்ள னர். இவர்களில், 2,388 பேருக்கு அடையாள அட் டையும், 1,238 பேருக்கு குடும்ப அட்டையும், 485 பேருக்கு வீட்டு மனைப் பட்டாவும் அளிக்கப்பட் டுள்ளது. 10 மாவட்டங் களில், 182 பேருக்கு தொகுப்பு வீடுகள் கட்ட, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கென, 70 சுய உதவிக் குழுக்குள் அமைக்கப்பட்டுள்ளன. உயர்கல்வி பயிலும் இரு திருநங்கைகளுக்கு, 46 ஆயி ரத்து, 280 ரூபாய் உதவித் தொகை அறிவிக்கப்பட் டுள்ளது. சுய தொழில் துவங்கு வதற்காக, 25 சத மானியத் துடன் தொழில் கடன் அளிக் கப்படுகிறது. உற்பத்தி சார்ந்த தொழில் கள் துவங்க, பல்வேறு பயிற் சிகள் வழங்கப்படுகின்றன. சமூகத்தில் தனித்து விடப் படாமல் இருக்க, திருநங்கை களை மக்களோடு சேர்ந்து வாழவைப்பதற்கு குடிசை மாற்று வாரியம், அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு களில், வீடுகள் ஒதுக்க நட வடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் வளர்மதி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: