திருச்சிராப்பள்ளி, பிப்.21- நாடு முழுவதும் பிப்ரவரி 28ம்தேதி அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் நடை பெறவுள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வதற்கான ஆயத்த மாநாடு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் அய்க்கப் அரங்கில் திங்க ளன்று மாலை நடந்தது. மாநாட்டில் சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், ஐஎன் டியுசி, பிஎம்எஸ், ஏஐசிசி டியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களின் முன் னணி தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் இந்த மாநாட் டில் கலந்து கொண்டனர். வேலைநிறுத்த நாளான பிப்ரவரி 28ம்தேதி திருச்சி மாவட்டத்தில் பிஎச்இஎல், மின்வாரியம், அரசுப்போக் குவரத்து, அரசுவிரைவுப் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து. சர்க்கரை, சிமென்ட் ஆலைகள், ஆட்டோ, சுமைப்பணி, கட்டுமானம் என அனைத்து முக்கிய தொழில்களில் உள்ள சுமார் 2லட்சம் பேர் கலந்து கொண்டு வேலை நிறுத்தத்தை வெற்றி கரமாக்குவது என்பன உள் ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இந்த ஆயத்த மாநாட் டில் சிஐடியு மாநில துணைப் பொதுச்செயலாளர் என்.சுகு மாறன், மாவட்ட செயலா ளர் ஆர்.ராஜா, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் மணி, வழக்கறிஞர் பால கிருஷ்ணன், பிஎம்எஸ் மாவட்டச் செயலாளர் ஸ்ரீ ராமன், சுரேந்திரநாத் ஏஐ சிசிடியு மாநில செயலாளர் தேசிகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply