தஞ்சை, பிப்.21- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 20 வது மாநில மாநாட்டிற்கான ஜோதி பிரச்சாரப் பய ணத்திற்கு தஞ்சாவூர் மாவட் டத்தில் சிறப்பான வரவேற்பு செவ்வாயன்று (பிப்.21) அளிக்கப்பட்டது. மாநில மாநாடு பிப்ரவரி 22ல் துவங்கி பிப்ரவரி 25 வரை நாகை மாவட்டத்தில் நடை பெறுகிறது. இம்மாநாட் டில் ஏற்றி வைக்கப்பட கோவை மாவட்டம் சின் னியம்பாளையத் தியாகிகள் நினைவாக ஜோதி எடுத்து வரப்பட்டு திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ் சாவூர், திருவாரூர் வழியாக நாகை மாவட்டத்தை அடைந்தது. தஞ்சாவூர் மாவட்ட எல்லையான புதுக்குடியில் கட்சியின் மாவட்டச் செய லாளர் கோ.நீலமேகம் தலை மையில் பூதலூர் ஒன்றியச் செயலாளர் என்.வி.கண் ணன், தஞ்சை ஒன்றியத் தi லவர் ஏ.வெண்மணிக்குமார் முன்னிலையில் சிறப்பான வரவேற்பு ஜோதி பிரச்சார பயணக்குழுவிற்கு கொடுக் கப்பட்டு, அழைத்து வரப் பட்டது. இக்குழு செங்கிப் பட்டி, வல்லம், மருத்துவக் கல் லூரி, கணபதி நகர், ரயி லடி, பழையபேருந்து நிலையம், மாரியம்மன் கோவில், கோவிலூர் வழி யாக அம்மாபேட்டை சென்றடைந்து, ஒன்றியச் செயலாளர் ஆர்.செந்தில் குமார் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் கட் சியின் நகரச் செயலாளர் பி.செந்தில்குமார் தலைமை யில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் பி.எஸ்.பாலசுப் பிரமணியன், வெ.ஜீவக் குமார், சாமி.நடராஜன், கே. ரமேஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.காம ராஜ், வி.கரிகாலன் உள் ளிட்ட ஏராளமானோர் பங் கேற்றனர். அதிர்வேட்டுகள் முழங்க அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பய ணக்குழு தலைவர் சி.பத்ம நாபன், எஸ்.கிருஷ்ண மூர்த்தி, ப.கு.சத்தியமூர்த்தி, என்.வி.தாமோதரன், இ.வி. வீரமணி, ஒய்.அன்பு, என். பாலசுப்பிரமணி, தஞ்சை மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ராம் உள்ளிட்டவர் களுக்கு மாவட்டச் செய லாளர் கோ.நீலமேகம் கத ராடைகள் வழங்கி சிறப் பித்தார். நிறைவாக பயணக் குழு தலைவர் சி.பத்மநாபன் ஏற்புரை வழங்கினார். மக்களுக்கான கோரிக்கை களை முன்வைத்து, கொள்கை முழக்கப் பாடல்களை பய ணக் குழுவினர் பாடியது மக்களை வெகுவாக கவர்ந் தது. கொளுத்தும் வெயிலை யும் பொருட்படுத்தாமல் நின்று கேட்க வைத்தது பய ணிக் குழுவினரை உற்சாகத் தில் ஆழ்த்தியது. நாகை மாவட்டம் சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடர் தரங்கம்பாடி வட்டம் ஆக் கூர் முக்கூட்டு வந்தடைந் தது. அங்கு வட்டச் செய லாளர் பி.சீனிவாசன் தலை மையில் உற்சாகமான வர வேற்பு நிகழ்ச்சி நடைபெற் றது. 20 அதிர்வேட்டுகள் முழங்க , மேளதாளங்களு டன் 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களு டன் தோழர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஜோதி திருக் கடையூர் வந்தடைந்தது. திருக்கடையூர் வட்டக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். மாநாட்டை யொட்டி தரங்கம்பாடி வட் டம்முழுவதும் செங்கொடி களால் அலங் கரிக்கப்பட்டு சிவப்பு மய மாக உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.