நாகப்பட்டினம், பிப்.21- மின்வெட்டு உள்ளிட்ட தமிழக மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச் சனைகள் குறித்து நாகையில் புதனன்று துவங்கி சனிக்கிழமை வரை நடைபெற உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில மாநாட்டில் விவாதிப் போம் என்றும், அடுத்த கட்ட போராட் டத்திற்கு வியூகம் வகுக்கும் மாநாடாக இது அமையும் என்றும் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன் கூறினார். நாகப்பட்டினத்தில் பிப்ரவரி 22 முதல் 25 வரை நடைபெற உள்ள கட்சி யின் 20 வது மாநிலமாநாட்டை யொட்டி பிப்ரவரி 21 அன்று நாகப்பட் டினத்தில் செய்தியா ளர்களைச் சந்தித்த அவர், நெல், கரும்பு, மஞ்சள், மரவள் ளிக்கிழங்குக்கு அரசு நியாயமான விலை வழங்கவேண்டும். உரிய விலை கிடைக்காததால் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட் டங்களைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள் பிற மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்து செல்வது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நில உச்சவரம்பு சட் டத்தை அமல்படுத்துவதில் திமுகவும், அதிமுகவும் அக்கறை காட்டவில்லை. இதைப்பற்றி அவர்கள் கவலைப்பட வும் இல்லை. இச்சட்டத்தை அமல் படுத்துவதன் மூலம் விவசாயிகள், விவ சாயத் தொழிலாளர்கள் வாழ்க்கையில் சிறு முன்னேற்றம் ஏற்படும். தமிழகத்தில் இன்றைக்கும் தீண் டாமை பிரச்சனை உள்ளது. தஞ்சை, நாகை மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட் டத்தினால் தீண்டாமை பிரச் சனை ஓர ளவுக்கு கட்டுப்படுத்தப்பட் டுளது. தமிழகத்தில் தொடரும் மின் வெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த ராம கிருஷ்ணன், தமிழகத்தில் மின்வெட்டு திடீரென உருவானதல்ல. திமுக, அதி முக ஆட்சியில் எதிர்கால மின்தேவையை கருத்தில் கொண்டு மின்திட்டங்கள் உருவாக்கப்படாததே இதற்குக்கார ணம். பள்ளி இறுதித் தேர்வு நெருங் கிக்கொண்டிருக்கும் நேரத்தில் மின் வெட்டு மாணவர்களின் நலனை பாதித்துள்ளது. மின்வெட்டால் விவ சாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக் கப்பட்டுள்ளனர் என்றார். வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை வாங்கி மின்பற்றாக்குறையை போக்க வேண்டும். சட்டமன்றத்திலிருந்து விஜயகாந்த் 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட் டிருப்பதை அரசு வாபஸ் வாங்கவேண் டுமென கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த ராமகிருஷ்ணன், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு உரிய வாய்ப்பு வழங்க வேண்டும். சட்ட மன்றம் ஜனநாயகப் பூர்வமாக நடத்தப் படவேண்டுமென கூறினார். திருக்கோவிலூரில் இருளர் இனபெண் கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட விஷயத்தில், அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என டிஜிபி கூறியிருப் பது குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராம கிருஷ்ணன், பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவா ரணம் வழங்கியுள்ளது. இந்த நிலையில், டிஜிபி கூறுவதை ஏற்க முடியாது. அவர் கூறுவது சரியானதல்ல என்றார். சுனாமி, தானே மற்றும் பல்வேறு இயற்கைச் சீற்றங்களால் நாகப்பட் டினம் மாவட்டம் தொடர்ந்து பாதிக் கப்பட்டு வருகிறது. நாகப்பட்டினத்தை பேரிடர் மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும் என்றார். நாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள 4 நாள் மாநாடு, மின்வெட்டு, விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்டு தமிழக மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கும். எதிர்கால இயக்கங்கள் குறித்து இம் மாநாடு திட்டமிடும் என்றார். பேட்டியின்போது மாநிலசெயற் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாவட்டச்செயலாளர் ஏ.வி.முருகையன், நாகை மாலி எம். எல்.ஏ., மாரிமுத்து உள்ளிட்டோர் உட னிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: