திருவாரூர், பிப். 21- நாகையில் புதனன்று தொடங் கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 20வது மாநாட்டை ஒட்டி கோவை சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவாக ஜோதி யும் மதுரை தியாகி லீலாவதி யின் நினைவாக கொடியும் பயணக்குழுவினரால் மாநாட்டு அரங்கிற்கு கொண்டுவரப்பட்டது. தியாகி லீலாவதி நினைவுக்கொடி மாநிலக்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பி னருமான என்.நன்மாறன் தலை மையில் பயணக்குழுவினரால் எடுத்துவரப்பட்ட தியாகி லீலா வதி நினைவு செங்கொடிக்கு திருவாரூர் மாவட்டத்தில் உற் சாகமிக்க எழுச்சியான வர வேற்பு அளிக்கப்பட்டது. செவ் வாய்க்கிழமை அன்று காலை 10 மணியளவில் திருவாரூர் மாவட்ட எல்லையான தம்பிக் கோட்டையில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.என்.தங்கராசு, ஒன்றியச் செயலாளர் கே.வி.ராஜேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் கே. பாலசுப்பிரமணியன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வி.கனக சுந்தரம், பி.செல்லையன், ஆர். வீரமணி, பி.கே.செல்லையன், கே.பழனிச்சாமி, எம்.குமார சாமி, ஜி.சீனிவாசன், முத்துப் பேட்டை நகரச் செயலாளர் கே. காளிமுத்து, உதயமார்த்தாண்ட புரம் கிளைச் செயலாளர் கே. ஸ்ரீதர், நாச்சிக்குளம் கிளைச் செயலாளர் என்.நடராஜன், தம் பிக்கோட்டை கீழக்காடு செய லாளர் வைர.கணபதி உள் ளிட்ட நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்து பயணக்குழு வினருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 20வது மாநாட்டை குறிக்கும் வகையில் 20 வெடி கள் வெடித்து வரவேற்பு அளிக் கப்பட்டது. பயணக்குழுவின ருக்கு சால்வைகள் அணி வித்து சிறப்பு செய்யப்பட்டது. பயணக்குழுவினர் ஊர்வல மாக அழைத்துவரப்பட்டு முத் துப்பேட்டை நகரம், நாச்சிக் குளம், கள்ளிக்குடி ஆகிய ஊர்களில் வரவேற்பு அளிக் கப்பட்டு பின்னர் திருத்துறைப் பூண்டி நகரத்திற்கு அழைத்து வரப்பட்டனர். திருத்துறைப்பூண்டி திருத்துறைப்பூண்டி அண்ணா சிலை அருகில் சிபிஎம் நகர செயலாளர் எஸ். சாமிநாதன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.என்.தங்கராசு, மாவட்டக்குழு உறுப்பினர் டி. சுப்பிரமணியன், நகரக்குழு உறுப்பினர்கள் எம்.பி.கே. பாண் டியன், டி.வி.பன்னீர்செல்வம், ஆர்.எம்.சுப்பிரமணியன், கே.ஜி. ரகுராமன் உட்பட திரளானோர் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பயணக்குழுவினருக்கு சிறப்பு செய்யப்பட்டு பின்னர் அவர்கள் திருத்துறைப்பூண்டி ஒன்றியப்பகுதியில் பயணித் தனர். இக்குழுவினரை கொற்கை கிராமத்தில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.தங்கராசு தலைமையில் ஒன்றிய செய லாளர் சி.ஜோதிபாசு வரவேற் றார். இந்த நிகழ்ச்சியில் மாவட் டக்குழு உறுப்பினர் கே.என். முருகானந்தம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் டி.வடிவேல், எஸ்.பவானி, டி.எஸ்.மணியன், ஆர்.வேதையன், என்.வீராச் சாமி, மேலகொற்கை கிளைச் செயலாளர் கே.மதியழகன், வாலிபர் சங்க ஒன்றியச் செய லாளர் டி.வி.காரல்மார்க்ஸ் உள் ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு உற்சாக வர வேற்பு அளித்தனர். பின்னர் கொற்கை கிராமத்திலிருந்து நாகை மாவட்டம் நோக்கி பய ணக்குழுவினர் பயணித்தனர். சின்னியம்பாளையம் தியாகிகள் ஜோதி பயணக்குழுவினரால் எடுத்துவரப்பட்டது. இந்த பயணக்குழுவினரை திருவா ரூர் மாவட்ட எல்லையான அம் மாப்பேட்டை அருகே மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் நூற் றுக்கணக்கானோர் திரண்டு வரவேற்றனர். மாவட்ட செயற் குழு உறுப்பினர் வி.எஸ்.கலிய பெருமாள், ஒன்றிய செயலாளர் பி.கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கே.கைலாசம், ஒன் றியக்குழு உறுப்பினர்கள் சோம. ராஜமாணிக்கம், எஸ்.நாகூ ரான், வி.முத்துவேல், விவசாயி கள் இயக்கத்தலைவர் பி.ரெத் தினம், நீடாமங்கலம் நகர செய லாளர் பி.டி.ஜோசப், பேரூராட்சி உறுப்பினர் எம்.அம்சவள்ளி, கிளை செயலாளர்கள் டி.ராஜ கோபால் (வையகளத்தூர்), எம். ரவி (ஒளிமதி), வி.குருசாமி (தேவங்குடி) ஆகியோர் வர வேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வரவேற்பு நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில் பயணக்குழு வினரை வாழ்த்தி தலைவர்கள் உரையாற்றினர். வாழ்த்து முழக் கங்களுடன் வரவேற்கப்பட்ட பயணக்குழுவினருக்கு சால் வைகள் அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. பின்னர் கொர டாச்சேரி நோக்கி பயணம் செய்த குழுவினரை கொரடாச் சேரி வெட்டாற்றுப்பாலம் அரு கில் கட்சியின் ஒன்றிய செய லாளர் எம்.சேகர் தலைமை யில் மாவட்டக்குழு உறுப்பினர் கே.சீனிவாசன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.தம்புசாமி, ஆர்.மருதையன், பி.பரமசிவம், ஆர்.மணியன், ஊராட்சி மன் றத் தலைவர் டி.ஜெயபால், கொரடாச்சேரி நகரச் செய லாளர் எஸ்.கே.சிவசாமி, கிளரி யம் கிளைச் செயலாளர் எஸ். சோமு, வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் கே.எஸ்.செந்தில் உள்ளிட்ட திரளானோர் வர வேற்றனர். பயணக்குழுவின ருக்கு சால்வைகள் அணிவிக் கப்பட்டது. திருவாரூர் அதன்பிறகு திருவாரூர் நகருக்கு வருகை தந்த பய ணக்குழுவினரை பேருந்து நிலையம் அருகில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. ரெங்கசாமி தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், நகர செய லாளர் எஸ்.ராமசாமி, நகரக்குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ் ணன், ஆர்.கோவிந்தராஜ், குரு. சந்திரசேகரன், எம்.தர்ம லிங்கம், பி.செல்வராஜ் உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு வரவேற்றனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.எஸ்.கலியபெருமாள் உள் பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பயணக்குழுவி னர் பின்னர் நாகை மாவட்டம் நோக்கி பயணித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.