சேலம், பிப். 21- சேலம் மாவட்டத்தில் நெசவுத் தொழிலுக்கு அடுத்தப்படியாக ஸ்டீல் பர்னிச்சர் தயாரிப்பு அதிக அளவு நடந்து வருகிறது. சேலத்தில் தயாரிக்கப் படும் பீரோ,கட்டில்,டேபிள், அலமாரி போன் றவை விழுப்புரம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி போன்ற இடங்களுக்கு அனுப்பப் பட்டு வருகின்றன. ஆர்டர்கள் அதிக அளவில் குவிந்தாலும். அவற்றை உரிய நேரத்தில் சப்ளை செய்ய முடியவில்லை. காரணம் கடுமையான மின்வெட்டு ஆகும்.வெல்டிங்,பர்னிச்சர்களுக்கு ஸ்பிரே பெயிண்ட் அடிக்க மின்சாரம் தேவை. ஆனால் சேலத்தில் அறிவிக்கப்படாத மின்வெட் டால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது பற்றி சேலம் மாவட்ட சிறு மற்றும் குறுந் தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் மாரியப்பன் கூறும்போது,மாவட்டத்தில் நிலவும் கடும் மின் வெட்டால் ஒரு நாளைக்கு ரூ.25 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்றார். ஸ்டீல் பர்னிச்சர் தயாரிப்பாளர்கள் கூறும்போது, சேலம் மாவட் டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஸ்டீல் பர்னிச்சர் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்உள்ளன. அடிக் கடி எற்படும் மின்வெட்டால் தொழிலாளர்களும், உற்பத்தியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலைமை விரைவில் சீரடையும் என்று நம்பு கிறோம் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.