மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாநில மாநாடு பிப்ர வரி 22 அன்று நாகப்பட்டினத்தில் துவங்குவதையொட்டி நாகை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநாட்டையும், மாநாட்டுப் பேர ணியையும் வெற்றிகரமாக்கிட மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக் கான தோழர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். மாநாட்டை விளக்கும் வகையில் கிராமங்கள் தோறும் செங்கொடிகள் ஏற்றப் பட்டுள்ளன. நாகை நகரத்தின் வீதிகள் தோறும் 10ஆயிரத்திற்கும் அதிகமான செங்கொடிகள் பட்டொளி வீசி பறக்கின்றன. நாகை மாவட்டத்திலுள்ள 484 ஊராட்சிகள் மற்றும் குக்கிராமங்களில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஒவ்வொரு வீடு வீடாகச்சென்று மாநாட்டுப் பேரணிக்கு மக்களை அழைத்துவரும் பணியில் கடந்த மூன்று நாட்களாக ஈடுபட்டுவருகின்றனர். பிரதிநிதிகள் மாநாட்டு அரங்கம், பொதுக்கூட்ட மேடை உள்ளிட்ட பல்வேறு அரங்கங்களை தலைவர்களின் ஓவியங் களால் அலங்கரிக்கும் பணியில் ஓவியக்கலைஞர்கள் வெண்புறா, மதுரை நாகமலை பாண்டியராஜன், திருப்பரங்குன்றம் சிவக்குமார், மயிலாடுதுறை ரவி, திருச்சி ராஜா, தலைஞாயிறு ஜோதிபாசு, வேட்டைக்காரணிருப்பு விஜய் உள்ளிட்ட பலர் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: