திருவாரூர், பிப். 21- நாகையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 20வது மாநாட்டையொட்டி மாநாட்டு விளக்க தெரு முனைப்பிரச்சாரம் திரு வாரூர் நகரத்தில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க் கிழமை அன்று நடை பெற்றது. பிரச்சாரத்திற்கு நகரச்செயலாளர் எஸ்.ராம சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் கே.ரெங்கசாமி, ஜி.பழனிவேல், நகரக்குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ் ணன், ஆர்.கோவிந்தராஜ், குரு.சந்திரசேகரன், எம்.தர்ம லிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். துர்காலயா சாலை, வடக்குவீதி, தெற்குவீதி, எல்லையம்மன் சன்னதி, பழைய நாகை சாலை, கடைத்தெரு, புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல் வேறு இடங்களில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் நடை பெற்றது.

Leave A Reply

%d bloggers like this: