கோழிக்கோடு, பிப்.21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது அகில இந்திய மாநாட்டையொட்டி கோழிக்கோட்டில் நடத்தப் பட்ட சதுரங்கப் போட்டியில் உள்ளூர் ஆட்டக்காரர் வெற்றி பெற்றார். அவர் ஒன் பது சுற்றுகளில் எட்டு புள்ளிகள் எடுத்து கோப்பையை தட்டிச் சென்றார். அவர் எந்தவொரு போட்டியிலும் தோற்கவில்லை. கடைசிச்சுற்றில் கே.லட்சுமி நாராயணனிடம் சமன் செய்து கொண்ட அர்ஜூன் ஏழு போட்டிகளில் வென்று இரண்டு போட்டிகளில் சமன் செய்து கொண்டார். மூன்று பேர் 7.5 புள்ளி கள் எடுத்தனர். எஸ்.ஆர்.ஹரிகிருஷ்ணன், எம்.மனு, எம்.பி. முரளிதரன் ஆகிய மூவரும் 2ம், 3ம், 4ம் இடங்களைப் பிடித்தனர். சிறந்த பெண் வீராங்கனையாக நிம்மி ஏ.ஜார்ஜ், சிறந்த மூத்த வீரராக டி.கே.ஜோசப், 19வயதுக்குட்பட்டவரில் சிறந்த வீரராக அர்ஜூன் சதீஷ், 15 வயதுக்குட்பட்டவர்களில் சிறந்த வீரராக கே.அரிஜித், பத்து வயதுக்குட்பட்டவரில் சிறந்த வீரராக கே.கே. சரயு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Leave A Reply