நானுற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர் கள் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலானோர் கூலித்தொழில்களில் ஈடு பட்டுள்ளவர்களே குடியி ருந்து வருகின்றனர். இக் குடியிருப்பு வீடுகள் கட் டப்பட்டு பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், முறையான பராமரிப்பு பணிகளை வாரியத்தின் சார்பில் எடுக்கப்படதால் பெரும்பான்மையான குடி யிருப்புகள் பழுதடைந்து காணப்படுகின்றன. குறிப் பாக, சுவற்றில் இணைப்பு கள் உடைந்தும், மேற்கூரை பெயர்ந்தும் அடிக்கடி விழுவதால்இக்குடியிருப்பு வாசிகள் ஒருவித அச்சத்து டன் வாழ்ந்து வருகின்றனர். இந்த வீடுகளை பராம ரிப்பு பணி மேற்கொள்ள கோரி, குடிசை மாற்று வாரிய அதிகரிகளுக்கு குடி யிருப்பு வாசிகளால் பல முறை மனுகொடுக்கப்பட் டது. இதன்பின் தற்போது வீடுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இந்நிலை யில் பழுதடைந்த வீடுகளி லிருந்து உதிர்ந்து விழும் சிமெண்ட் சிலாப்புகள் சாக்கடை நீர் செல்லும் கால்வாயில் குவிந்துள் ளதால் சாக்கடை நீர் வெளி யேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால், தேங்கிய சாக் கடை நீரை அகற்றித்தரும் படி அப்பகுதி பொதுமக் கள் மாநகராட்சி அதிகாரி களிடத்தில் மனு கொடுத் தனர். ஆனால் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் எவ் வித நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை. இத னால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் பழைய பேருந்து நிலையம் நுழைவு பாதையான ஆட்கொல்லி பாலத்தில் திடீரென்று சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: