திருப்பூர், பிப். 21- சமையல் காஸ் சிலிண்டர் வெடித்ததில் 2 குழந் தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயமடைந்தனர். அதில் 3 பேர் கவலைக் கிடமான நிலையில் கோவை அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பூர் ஊத்துக்குளி சாலை மண்ணரை சத்யா நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(37).இவர் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி ராதா மணி(27), மகள் சிந்து(10), மகன் நிதீஷ்(3) உள்ளனர். சிந்து அருகிலுள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். திருப்பூர் பாரப்பாளையத்தில் ஆறுமுகத் தின் பெற்றோர், சகோதரர் பிரகாஷ்(38) ஆகியோர் வசிக்கின்றனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறுமுகத்தை சந்திக்க பிரகாஷ் அவரது வீட்டுக்கு வந்துள்ளார். தொடர்ந்து, இரவு அங் கேயே தங்கினார். இரவில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் கொசுத்தொல்லை அதிகளவில் இருந்ததாக தெரிகி றது. இதையடுத்து, இரவு ஆறுமுகம் கொசுவர்த்தி சுருளை பற்ற வைத்துவிட்டு தூங்கினர். நள்ளிரவு வீட்டில் இருந்த சமையல் காஸ் சிலிண்டரி லிருந்து காஸ் முழுமையாக கசிந்துள்ளது. தொடர்ந்து, கொசுவர்த்தி சுருளில் இருந்த தீ, காஸ் மீது பற்றி யதில் அதிபயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து தீ பற்றியது. இந்த அதிர்வு காரணமாக வீட்டின் மேற்கூரை பெயர்ந்தது. அருகிலுள்ள வீடுகளுக்கும் இந்த அதிர்வு உணரப்பட்டத்தை அடுத்து அதிர்ச்சி யடைந்த அப்பகுதியினர், வெளியே வந்து பார்த்த போது காஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் இருந்த ஆறுமுகம், அவர் மனைவி ராதாமணி, சகோதரர் பிரகாஷ் மற்றும் குழந்தைகள் சிந்து, நிதீஷ் ஆகிய 5 பேரும் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். உடனடி யாக அவர்கள் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். படுகாயமடைந்த 5 பேரில் ஆறுமுகம், ராதா மணி, சிந்து ஆகியோரின் உடல்களில் 80 சதவிகித அளவுக்கு தீக்காயம் ஏற்பட் டுள்ளதால் அவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பிரகாஷ், நிதீஷ் ஆகியோர் 40 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்ட ஆறுமுகத் தின் வீட்டை டிஎஸ்பி ராஜாராம் உள்ளிட்ட போலீசார் பார்வையிட்டு சோதனை நடத்தினர். மேலும், இவ்விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply