உரிமம் ரத்து செய்யப்பட்ட தொலைத் தொடர்பு நிறுவனங் கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் – மத்திய அமைச்சர் கபில் சிபல். ச.சா – இந்த ஆறுதல் ஆ.ராசாவுக்கும் பொருந்துமா…?? * * * அசாமில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகரிப்பு – மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். ச.சா – மத்த மாநிலங்களா இருந்தா மத்திய, மாநில அரசு களுக்குப் பொறுப்புன்னு சொல்றீங்க.. இங்க ரெண்டுமே நீங்கதானே… * * * தேர்தல் விதிமுறையைக் காங்கிரஸ் மதிக்கவில்லை – பாஜக தலைவர் அத்வானி ச.சா – ராமர் கோவில்னு சொல்லி மதவெறியக் கிளப்புறது தேர்தல் விதிமுறைய மதிக்குறதா…?? * * * கல்விக்கடன் விதிமுறைகளைக் கடுமையாக்க வங்கிகள் முடிவு – செய்தி. ச.சா – ஏற்கெனவே கிடைக்குறதுல நெருக்கடிதான்…!!

Leave a Reply

You must be logged in to post a comment.