சென்னை, பிப்.21- சத்துணவு பணியாளர் நியமனத்தில் மாற்றுத்.திற னாளிகளுக்கு 3சதவிகித இட ஒதுக்கீடு செய்யவேண் டும் என்று மாற்றுத்திறனா ளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கம் தொடுத்துள்ள வழக் கில், இரண்டு வார காலத் திற்குள் அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என உயர்நீதிமன்றம் உத் தரவு பிறப்பித்துள்ளது. 3 சதவீத இட ஒதுக்கீடு வழங் காவிட்டால் மனு ஏற்கப் படும் என்று அறிவித்துள் ளது. இது பற்றிய விபரம் வருமாறு: தமிழ்நாடு முழுவதும் சத்துணவு மற்றும் ஊட் டச்சத்து மையங்களில் காலி யாக உள்ள சுமார் 28,500 பணியிடங்களை நிரப்பும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இதற் காக தமிழக அரசு வெளி யிட்டுள்ள அரசாணையில் ஊனமுற்றோர் சம வாய்ப் புச்சட்ட விதியின்படி 3 சத விகித இட ஒதுக்கீடு பின் பற்றப்படவில்லை. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் நாடு அனைத்துவகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்கான சங்கத்தின் சார் பில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள் ளது. அந்த மனுவில், ஊன முற்றோர் சம வாய்ப்புச் சட் டத்தின்படி சத்துணவு மற் றும் அங்கன்வாடி மையங் களில் பணிபுரியும் பணியா ளர்கள் நியமனத்திலும் 3சத வீத ஒதுக்கீடு முறையைப் பின்பற்ற அரசுக்கு உத்தர விடவும், அதுவரையிலும் அதற்காக போடப்பட்ட அரசாணையை நிறுத்தி வைக்கவும் கோரப்பட்டது. அம்மனு செவ்வாயன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் மற் றும் நீதிபதி சிவஞானம் அடங்கிய முதல் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கள், மாற்றுத்திறனாளிக ளுக்கான 3 சதவிகித இட ஒதுக்கீட்டை சத்துணவு மற்றும் ஊட்டச்சத்துப் பணி நியமனங்களில் அமல் படுத்துவது குறித்து இரண்டு வார காலத்திற்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட் டனர். 3 சதவிகித இட ஒதுக் கீட்டை அமல்படுத்தவில்லை என்றால், பதில் மனுவை தாக்கல் செய்யாவிட்டால் இம்மனு ஏற்றுக்கொள்ளப் படும் என்றும் அறிவித் தனர். சங்கத்தின் சார்பில் வழக் கறிஞர்கள் எம்.கிறிஸ்டோ பர், கே.சி.காரல்மார்க்ஸ் ஆகியோர் ஆஜராகினர். மேற்கண்ட செய்தியை சங்கத்தின் மாநில செய லாளர் எஸ்.நம்புராஜன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: