சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் செவ் வாயன்று பிற்பகல் ஆலோசனை நடத் தினார். சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடக் கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் புத னன்று தொடங்குகிறது. சங்கரன்கோவில் தொகுதி தேர்தல் அலுவலராக கலால் துறை உதவி ஆணையர் செல்வராஜ் நிய மிக்கப்பட்டுள்ளார். முதன்மை உதவி தேர்தல் அலுவலராக சங்கரன்கோவில் தாசில்தார் தாமோதரன், கலால்துறை உதவி ஆணையர் அலுவலக மேலாளர் பரமசிவன், சங்கரன்கோவில் நகராட்சி கமிஷனர் செந்தில் முருகன் ஆகியோர் நியமிக்கப்பட் டுள்ளனர். வேட்பு மனுக்களை நெல்லை ஆட் சியர் அலுவலக 2ஆம் தளத்தில் உள்ள தேர்தல் அலுவலர் செல்வராஜ் அல்லது சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் உள்ள முதன்மை உதவி தேர்தல் அலுவலர் தாமோதரன் ஆகி யோரிடம் தாக்கல் செய்யலாம். காலை 11 மணி முதல் பிற் பகல் 3 மணி வரை வேட்புமனு பெற்றுக் கொள்ளப்படும். இந்நிலையில் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார், மாவட்ட ஆட்சியர் செல்வராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி உமா மகேஷ்வரி மற் றும் காவல்துறை அதிகாரி களுடன் புத னன்று பிற்பகல் ஆலோசனை நடத் தினார். வேட்பு மனுத்தாக்கல் செய்யும்போது வேட்பாளரு டன் 4 பேர் மட்டுமே செல்ல வேண்டும். சங்கரன்கோவில் தொகுதி தனி தொகுதி என்பதால் மனு த்தாக்கலின் போது கட்டணமாக ரூ. 5 ஆயிரம், அர சியல் கட்சியின் அங்கீகார கடிதம், சொத்து பட்டியல், ரொக்கம், வங்கி இருப்பு, வேட் பாளர் மீதான கிரிமினல் வழக்குகள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். அதனை தேர் தல் அலுவலர்கள் கவனமுடன் பார்த்து மனுக்கள் வாங்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும் தேர்தல் தேவைகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார்.

Leave A Reply

%d bloggers like this: