கோவை, பிப். 21- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் திற்கான குடிமையியல் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவின்படி கோவை மாவட்ட அளவிலான விழிப்பு கண்காணிப்புக்குழு திருத்தியமைக்கப்பட் டுள்ளது. இக்குழுவில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கோவை மாவட்டச் செயலாளர் யு.கே.சிவஞானமும் சேர்க்கப்பட் டுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் மு.கருணா கரன் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) விதிகள் 1995 பிரிவு 17 (1)ன் படி மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு இயங்கி வருகிறது. இக்குழு தற்போது திருத்தியமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி இக்குழுவின் தலைவராக மா வட்ட ஆட்சியரும், உறுப்பினர்களாக மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல அலு வலர், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் எம். ஆறுமுகம் எம்.எல்.ஏ, காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர், கனரா வங்கி மேலாளர் வணங்காமுடி, டாக்டர் கணேசன் (குழந்தைகள் சிறப்பு மருத்துவர்), பி.மனோகர் (சுகர்கேன் பிரீடிங் இன்ஸ்டிடியூட்), டாக்டர் அம்பேத்கர் கல்வி சமூக வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் எஸ். செல் வக்குமார், வசந்தம் அறக்கட்டளை சார்பில் எஸ்.ஏ.வெள்ளிங்கிரி, தமிழக ஆதிவாசி அமைப் பின் மாநிலச் செயலாளர் கே.ரஞ்சித், கோவை மாவட்ட அண்ணா சுகாதாரப் பணியாளர் சங்க இணைச் செயலாளர் எம்.சரவணன், காளியாபுரம் சே.சாவித்திரி, சின்னியம்பாளையம் ஆர்.ஞான சேகரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோவை மாவட்டச் செயலாளர் யு.கே.சிவஞானம் மற்றும் கோவை வளர்கல்வி திட்ட அலுவலர் ஜி.ஜோதிராஜா உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவின் கூட்டம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை கூட்டப்பட்டு அதில் குடிமையியல் பாதுகாப்பு பிரிவுகள் அடிப்படை யில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஆட்சியர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.