கோவை, பிப். 21- கேரளா செல்லும் 13 ரயில்களை கோவை வழியாக இயக்குவது குறித்து ஆய்வு செய்யப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி கோவையில் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ் சிக் கோட்டில் ரயில்பெட்டி தொழிற்சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது . இவ்விழாவிற்கு கோவை வழியாக செல்ல மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி மற்றும் இணை அமைச்சர் முனியப்பா ஆகியோர் வந்திருந்தனர். இந்நிகழ்ச்சிற்கு செல் வதற்கு முன்னதாக, கோவையில் செய்தியாளர் களிடம் தினேஷ் திரிவேதி தெரிவித்ததாவது: நாடு முழுவதும் ரயில்நிலையங்களில் அடிப் படை கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அமைச் சகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கோவை ரயில் நிலையத்திலும் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாட் டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கேரளா செல்லும் 13 ரயில்கள் கோவை வழியாக இயக்கப்பட வேண் டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள் ளனர். எனவே இது குறித்து ரயில்வே மத்திய இணை அமைச்சர் முனியப்பா தலைமையில் ஆய்வு நடந்துவருகிறது என தெரிவித்தார். இதையடுத்து, தட்சின ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் (டிஆர்இயு) சார்பில் மத்திய ரயில்வே அமைச்சரிடம் மனு ஒன்ற அளிக்கப்பட்டது. இதில் கோவையிலிருந்து ஈரோடு செல்லும் ரயிலை சேலம் வரை இயக்க வேண்டும். திருச்சி பாலக்காடு ரயிலில் கூட்டம் அதிகமாக இருப்ப தால் 8 பெட்டிகளுடன் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும். ஈரோடு பழனி புதிய ரயில்பாதை திட்டப் பணிகளை விரைவில் பூர்த்தி செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை கள் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இம்ம னுவை டிஆர்இயு சேலம் கோட்ட உதவித் தலைவர் குருசாமி, சேலம் கோட்டச் செயலாளர் டி.முரு கேசன், உதவிச் செயலாளர் சதீஸ்குமார், கோவை கிளைத் தலைவர் சூசைராஜ், கிளைச் செயலாளர் காளிமுத்து ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மத்திய ரயில்வே அமைச்சரிடம் அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: