தஞ்சாவூர், பிப்.21- கும்பகோணத்தை அடுத்த நாச்சியார் கோயிலில் குத்துவிளக்கு தொழிலாளர்கள் கடந்த 9ந்தேதி முதல் கூலி உயர்வு கேட்டு வேலைநிறுத்தம் செய்து வரு கின்றனர். உலகப் பிரசித்தி பெற்ற பித்தளை குத்து விளக்கு உற்பத்திக்கு தேவையான உப மூலப் பொருட்களின் விலை கடந்த இரண்டு வருட காலத்தில் பல மடங்கு உயர்ந்துவிட்டதாலும் செலவினங்கள் அதிகரித்த தாலும் தொடர் மின்வெட்டு காரணமாகவும் ஜனவரி 24 அன்று நாச்சியார்கோயில் பாத்திர வியாபாரிகள் சங்கத்திடம் கூலி உயர்வுகேட்டு மனுக் கொடுக்கப் பட்டது. அவர்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தால் தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. ஆகையால் குத்துவிளக்கு தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வரை பிப்ரவரி 9 முதல் தொடர் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்தனர். அதன் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை வரை வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். வேலைநிறுத் தம் சம்பந்தமாக கோட்டாட்சியரிடம் மனுக் கொடுத் தனர். அழைத்து பேசுவதாகக் கூறினர். இதுநாள் வரை பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால் தொழிலா ளர்கள் வருமானம் இல்லாமல் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில்உள்ளனர். இதனால் வியாபாரம் மற் றும் அதைச் சார்ந்த தொழிலாளர் குடும்பங்கள் மிக வும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: