ஈரோடு, பிப். 21- சூரம்பட்டி நகராட்சி யில் கடந்த சில நாட்களாக குடிநீரின்றி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அல்லல்பட்டு வருகின்ற னர். அவர்களுக்கு இலவச இணைப்பாக சுத்தம் செய் யப்படாத சாக்கடைகளும் தேங்கி குடியிருப்பு பகுதி யில் கடும் துர்நாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஈரோடு சூரம்பட்டி நகராட்சி பகுதிக்குட் பட்ட சங்கீதா தியேட்டர் சாலை, விவேகானந்தர் வீதி உள்ளிட்ட பல பகுதி களில் கடந்த சில நாட்க ளாக குடிநீர் விநியோகம் இல்லை. இப்பகுதியில் வீடுகளுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் தனி குடிநீர் இணைப்பில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் இருந்து வந் தது. ஆனால் கடந்த சில நாட்களாக அதில் குடிநீர் விநியோகம் என்பது அறவே இல்லை. மேலும் வீதிகளில் பொது உபயோ கத்திற்கு என நகராட்சி சார்பில் போடப்பட்ட ஆழ்துளை கிணறு மூலம் பெறப்படும் தண்ணீர் விநி யோகிக்கப்பட்டு வருகி றது. இதில் அந்தந்த வீதி யில் இருக்கும் பொதுமக் கள் தங்களுக்குள் முறை வைத்து வீட்டிற்கு 2 குடம் வீதம் பிடித்து வந்தனர். இது குடிப்பதற்கு பயன் படாத உப்புத் தண்ணீரா கும். ஆனால் இப்போது அந்தத் தண்ணீரும் சீரற்ற மின் விநியோகம் காரண மாக வீட்டிற்கு ஒரு குடம் கிடைப்பதே பெரும்பாடு எனும் நிலையில் உள்ளது. கடந்த சில நாட்களாக குடிநீரும் இன்றி உப்புத் தண்ணீரும் இன்றி சூரம் பட்டி நகராட்சிப் பகுதி மக்கள் பெரும் அவதிக் குள்ளாகியுள்ளனர். இவ்வாறு தண்ணீர் பிரச்சனை ஒருபுறம் அவர் களை வாட்டி வதைக்க இலவச இணைப்பாக அப் பகுதிகளில் சாக்கடைக ளில் அடைப்பு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மக்கள் வீடுக ளுக்குள் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாக்கடை தூர்வாரும் நகராட்சி ஊழியர்களை காண்பதே அரிதாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதி காரிகள் தகுந்த நடவ டிக்கை மேற்கொண்டு தங்கள் பிரச்னைகளை தீர்ப்பார்களா என எதிர் பார்த்துக் காத்துள்ளனர் சூரம்பட்டி நகராட்சி வாழ் பொதுமக்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.