புதுதில்லி, பிப்.21- குஜராத்தில் 2002ம் ஆண்டில் நடத்தப்பட்ட படுகொலை களின்போது கொல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட, அடை யாளம் தெரியாத 28 பேரின் சடலங்களை தோண்டி எடுத்தது தொடர்பாக சமூக சேவகர் டீஸ் டா செட்டால்வாட் மீது விசா ரணைக்கு மாநில அரசு ஆணை யிட்டதை உச்சநீதிமன்றம் கடு மையாக விமர்சித்துள்ளது. “இது அவரைப் பழிவாங்குவதற் காகப் போடப்பட்டுள்ள ‘போலி யான’ வழக்குதான்” என்று உச்ச நீதிமன்றம் கூறியது. நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத்தில், 2002ல் மதவெறி சக் திகளால் சிறுபான்மை மக்கள் மீது கொடூரமான தாக்குதல் தொடுக்கப்பட்டது. அப்போது கான்பூர் வட்டத்தின் பாந்தர் வாடா உள்ளிட்ட கிராமங்களில் கொல்லப்பட்ட 28 பேரின் உடல் கள் அடையாளம் காணப்பட வில்லை எனக்கூறி புதைக்கப் பட்டன. அந்தச் சடலங்களை அனுமதி பெறாமல் தோண்டி எடுத்ததாக ஷெட்டால்வாட் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. குற்ற வியல் சட்டத்தின் கீழ் அவர் மீது விசாரணைக்கும் ஆணையிடப் பட்டது. இதை எதிர்த்து ஷெட் டால் வாட் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவின் மீது செவ்வாயன்று (பிப்.21) விசாரணை மேற் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி கள் அப்தாப் ஆலம், ரஞ்ஜனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் கொண்ட அமர்வுக்குழு, “இது மனுதாரரைப் பழிவாங்குவதற் காகப் போடப்பட்டிருக்கிற 100 விழுக்காடு போலியான வழக்கு தான்” என்று கூறியது. “இது போன்ற வழக்குகள் மாநில அர சுக்குப் பெருமை சேர்க்காது,” என்றும் நீதிபதிகள் கூறினர். மாநில அரசு இந்த விசார ணையைத் தொடர்வது முறை யல்ல என்று கூறிய நீதிபதிகள், ஷெட்டால்வாட் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை மாநில அரசுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் பிரதீப் கோஷ் படித்துப்பார்த்து, அடுத்து என்ன செய்ய வேண்டும் என அரசுக்கு ஆலோசனை கூற வேண்டும் என்று பணித்தனர். இதே போல், குஜராத் அரசின் வழக்கறிஞர் ஹேமன்டிகா வாஹி அந்த முதல் தகவல் அறிக்கை யைப் படித்துப்பார்க்கவும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.

Leave A Reply