ஸ்ரீநகர், பிப். 21 – காஷ்மீர் பள்ளத்தில் திங்கள் இரவில் (7.29 மணி) ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகள் அளவு கொண்ட மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக்கில் மையம் கொண் டிருந்தது என்று பேரிடர் மேலாண்மை துறையின் அதிகாரியொருவர் கூறி னார். ஸ்ரீநகரில் இருந்து வட கிழக்கில் 496கி.மீ. தொலை வில் லடாக் பகுதியில் நில நடுக்கம் மையம் கொண் டிருந்தது. உயிர் மற்றும் பொருட்சேதம் குறித்த தகவல்கள் இல்லை.

Leave A Reply